
கணினியில் நோட்பேடை (Notepad) திறந்து கொள்ளுங்கள். கீழேஉள்ள வரிகளை காப்பி செய்து கொண்டு நோட்பேடில் பேஸ்ட்செய்து கொள்ளவும். இணையதளம் உங்கள் விருப்ப இணைய உலாவியில் திறக்குமாறு அமைத்து கொள்ள முடியும்.
இணையதளம் Internet Explorer -ல் திறக்க வேண்டும் என்று விரும்பினால்
Windows Registry Editor Version 5.00
[HKEY_CLASSES_ROOT\Directory\Background\shell\Tvs50 - TamilNutpam]
[HKEY_CLASSES_ROOT\Directory\Background\shell\Tvs50 - TamilNutpam\command]
@="iexplore tvs50.blogspot.com"
இணையதளம் Firefox -ல் திறக்க வேண்டும் என்று விரும்பினால்
Windows Registry Editor Version 5.00Tvs50 - TamilNutpam என்பதில் இணையதள பெயரை கொடுத்து கொள்ளுங்கள். tvs50.blogspot.com என்பதில் இணையதள முகவரியை கொடுத்து கொள்ளுங்கள்.
[HKEY_CLASSES_ROOT\Directory\Background\shell\Tvs50 - TamilNutpam]
[HKEY_CLASSES_ROOT\Directory\Background\shell\Tvs50 - TamilNutpam\command]
@="firefox tvs50.blogspot.com"

முக்கியமாக File --> Save As கொடுத்து கோப்பை சேமிக்கவும். கோப்பின் பெயர் addshortcut.reg என்றும், 'Save as type :' என்பதில் 'All Files' தேர்வு செய்து கொள்ளவும். Save செய்து கொள்ளவும்.

இப்போது addshortcut.reg கோப்பை டபுள் கிளிக் செய்து திறக்கவும். Registry -யில் நீங்கள் அளித்திட்ட தகவல்கள் சேர்க்கப்பட்டது என்று வரும். அவ்வளவுதான்.
இப்போது கணினியின் டெஸ்க்டாப்பில் மௌசால் வலது கிளிக் செய்யவும். நீங்கள் கொடுத்த இணையதள முகவரி இருக்கும்.

அதை கிளிக் செய்யும்போது நீங்கள் கொடுத்திட்ட இணையதளம் திறக்கும்.
குறிப்பு : இது விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 -ல் மட்டுமே வேலை செய்யும். விண்டோஸ் எக்ஸ்பியில் வேலை செய்யாது .