பதிவு திருடப்படுகிறது என்ற கவலையா? 50% தீர்வு

பதிவு திருடப்படுகிறது என்ற கவலையா? ஓர் இலவச கண்காணிப்பு சேவை உங்களுக்கு ஓரளவு மகிழ்ச்சியை தரலாம்.

உங்கள் பிளாக் படைப்புகள் அனைவரையும் கவரும் வண்ணம் இருந்தால் அதன் இடுகைகள் அடுத்தவரால் நீங்கள் அறியாமலேயே எடுத்து கையாளப்படுவது இயல்பாக நடக்கும். மின்னஞ்சல் மூலமாகவோ, தன் பிளாக்கில் இடுவது மூலமோ இந்த தவறை செய்வர். சிலர் அதை எழுதிய பதிவருக்கு உரிய அங்கீகாரம் அளித்தது சுட்டி (Backlink) கொடுத்து இருப்பர். சிலர் அதை கண்டு கொள்ளாது தன் சொந்த படைப்பு போல் வெளியிட்டு இருப்பர். உங்கள் படைப்பு நீங்கள் அறியாமல் / உங்களுக்கு அங்கீகாரம் அளிக்காமல் எடுக்கப்பட்டதை அறியும் போது அடையும் மன உளைச்சலுக்கு அளவில்லை.

இது போன்று அடுத்தவர் படைப்புகளை எடுத்து கையாள்பவர்களை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்.

1. தெரிந்தே செய்பவர்கள் :

அடுத்தவர் படைப்பை எடுக்கும் போது அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்பது அறிந்தவர்கள். இருந்தும் செய்ய மாட்டார்கள். "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்ற வகையை சேர்ந்தவர்கள். உங்கள் பதிவு திருடப்பட்டதை அறிந்தால் எடுத்தவருக்கு மெயில் அனுப்பி விளக்கம் கேட்கலாம். தவறை மீண்டும் செய்யாதீர்கள் என்று அறிவுறுத்தலாம். கேட்காமல் தொடர்ந்து செய்யும்பட்சத்தில் அவரது இணையதளம் / பிளாக் ஹோஸ்டிங் செய்யும் நிறுவனத்திற்கு மெயில் அனுப்பி அவரது பதிவுகளை நீக்க சொல்லலாம்.

எதுவும் பலிக்க வில்லையெனில் திருடியவர் மீதும் , அவரது தளத்தை ஹோஸ்டிங் செய்யும் நிறுவனம் மீதும் வழக்கு தொடரலாம். ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் இடுகைகளை எடுத்து போடுபவர் உங்களை விட பெரிய பதிவர் ஆகி விட முடியாது. சிறிது நாளில் அடங்கி விடுவார். இவர்களை கண்டு கொள்ளாமல் விட்டு மன உளைச்சலில் இருந்து உங்களை காத்து கொள்ளுங்கள்.

2. அறியாமல் செய்பவர்கள் :

பெரும்பாலும் இணையத்திற்கு புதியவர்களாக இருப்பார்கள். நன்றி தெரிவித்தல் , 
Backlink போன்ற விதிமுறைகள் தெரியாது. நல்ல படைப்புகளை காணும் போது, அடுத்தவருக்கு சொல்லலாமே என்று காப்பி செய்து மெயில் மூலமாகவோ , தன் பிளாக் மூலமாகவோ, ஆர்க்குட் போன்ற சமூக தளங்கள் மூலமாகவோ சாட்டிலோ பரப்புவார்கள். பிளாக்குகளில் சேமித்து வைப்பார்கள். படைப்புக்கு சொந்தக்காரர் மன உளைச்சலுக்கு உள்ளாகி கண்டன பதிவு போட்டு காட்டமாய் திட்டும் போது தானும் மன உளைச்சலுக்கு உள்ளாகி நொந்து போவார்கள். பின்பு புரிந்து கொண்டு நல்வழி நடப்பர்.

[ என்னதிது கதை வளவளன்னு போய்கிட்டு இருக்கு :( .... மேட்டருக்கு வருவோம்]

இரண்டாவது வகையில் பதிவுகளை எடுப்பவர்களிடம் இருந்து நம்மை காக்க / உதவ / தொடர / கண்காணிக்க ஒரு தளம் இலவச சேவை அளிக்கிறது.

தளத்தின் முகவரி : http://tynt.com/

இந்த தளத்தில் கணக்கு ஆரம்பித்து , அவர்கள் தரும் Javascript நிரலை உங்கள் தளம் / பிளாக்கில் நிறுவி கொண்டால் பின்வரும் வசதிகள் கிடைக்கும்.

1. உங்கள் பிளாகின் எந்த இடுகைகள் அதிகம் காபி செய்யபடுகின்றன என்பதை கண்டறிதல்

2. காப்பி செய்தவர் எந்த தளத்தில் உங்கள் படைப்புகளை உபயோகித்து வருகிறார் என்பதை கண்டறிதல்

3. காப்பி செய்த தளத்தில் / மெயிலில் / சாட்டில் இருந்து Backlink மூலம் உங்கள் தளத்துக்கு டிராபிக் பெறுதல்.

4. அதிகம் காப்பி செய்யப்படும் இடுகைகளை அறிவதன் மூலம், பார்வையாளர்கள் அதிகம் விரும்புவதை கணிக்க முடியும். இது அது போன்ற இடுகைகளை மேலும் இட்டு தளத்தை முன்னேற்ற பாதையில் மேம்படுத்த முடியும்.

5. இப்படி கிடைக்கும் Backlink மூலம் தேடுபொறிகளில் (Search Engine) உங்கள் தளம் நல்ல ரேங்க் பெற்று தேடல்களில் முன்னணியில் , முகப்பு பக்கத்தில் வர முடியும்.


முதலில் இந்த வீடியோவை பாருங்கள் எளிதான முறையில் விளக்கி உள்ளார்கள்.



இதனை எவ்வாறு உபயோகிப்பது என்று விரிவாக பார்ப்போம்.

முதலில் Tynt தளத்திற்கு சென்று கணக்கை உருவாக்கி கொள்ளுங்கள்.

அடுத்து தோன்றும் பக்கத்தில் "SCRIPT" வழங்கப்படும். அதனை காப்பி செய்து கொள்ளுங்கள்.

அடுத்து உங்கள் பிளாக்கரின் Dashboard -ல் Layout --> Edit HTML பக்கத்திற்கு செல்லவும் . பின்பு அங்கு தோன்றும் Code -ல் இறுதியில்  என்ற வார்த்தையை தேடவும். அதன் மேலே நீங்கள் காப்பி செய்து வைத்துள்ள ஜாவா ஸ்கிரிப்ட் நிரலை பேஸ்ட் செய்து விடவும்.

முக்கியமாக இங்கு ஒரு சிறு மாறுதல் செய்ய வேண்டியது அவசியமாகிறது. பேஸ்ட் செய்த javascript நிரலில் '&' எழுத்தை தேடுங்கள். அதற்கு அடுத்து 's=52' என்பதற்கு முன்னதாக amp; என்பதனை சேருங்கள். கீழே உள்ள படத்தை பாருங்கள் புரியும்.


SAVE TEMPLATE கிளிக் செய்து கொள்ளுங்கள்.

அல்லது

ஒரு புதிய (HTML/JavaScript) வகை widget உருவாக்கி அதில் அவர்கள் அளிக்கும் codeஜ paste செய்து save செய்தால் வேலை செய்யும்.. மேலும் விபரங்களுக்கு இந்த பக்கத்தை பார்க்கவும்.http://tracer.tynt.com/faq-how-to-set-up-tracer-on-your-blog . இந்த எளிதான முறையை பின்னூட்டத்தில் கூறிய பதிவர் சந்தோஷ் = Santhosh அவர்களுக்கு நன்றி

அவ்வளவுதான். இனி உங்கள் தளத்தில் ஒவ்வொரு முறை எழுத்துகள், படங்களை செலக்ட் செய்து காப்பி செய்யும் போது இந்த Javascript கண்காணித்து கொண்டே இருக்கும்.

ஒரு சிறிய உதாரணத்தை பார்ப்போம்.

"பிளாக்கின் உள்ளேயே படங்களை திறக்க டிப்ஸ்" இடுகையிலிருந்து ஒரு பத்தியை காப்பி செய்து மெயில் அனுப்புவதாகவோ , வேறு பிளாக்கில் போடுவதாக கொள்வோம்.



காப்பி செய்பவர் அதனை எங்காவது பேஸ்ட் செய்யும் போது அந்த இடுகையின் லிங்க்கோடு பேஸ்ட் ஆகும்

Read more: http://tvs50.blogspot.com/2009/04/lightbox-tweak-for-blogger.html#ixzz0Exg1bKxH&B

என்று எடுக்கப்பட்ட இடத்திற்கு backlink இருக்கும். இதன் மூலம் தளத்திற்கு டிராபிக் வருவதற்கு வாய்ப்பு உண்டு.

அந்த லிங்க்கை பார்வையாளர் கிளிக்கும் போது இடுகை திறந்து காப்பி செய்த பத்தி ஹைலைட் செய்து காண்பிக்கும்.



Tynt - இன் Dashboard க்கு சென்று தளத்தில் காப்பி செய்யப்பட்ட புள்ளிவிவரங்களை பெறலாம்.

நல்ல சேவை என்றே தோன்றுகிறது. காலபோக்கில் பிரபலமாகிறதா என்று பார்க்கலாம்.

இணையத்தில் நண்பர்களிடம் ஆலோசனை பெற்று பலர் கற்று கொடுத்த தகவல்கள் வைத்து எழுதி வருகிறேன். நான் கொடுக்கின்ற தகவல்கள் ஏதேனும் தவறாக இருப்பின் சுட்டி காட்ட வேண்டுகிறேன்.

நன்றி.

Post a Comment

Previous Post Next Post