கணனியின் மூளையாகச் செயற்படுவது சிபியூ (CPU) என்பதை நீங்கள் அறிவீர்கள் அதேபோன்று கணனியின் இதயமாகச் செயற்படுவது எது என்பதை அறிவீர்களா? அதுதான் மதர்போர்டில் சிபியூவிற்கு அருகே பொருத்தப்பட்டிருக்கும் Chipset சிப்செட் எனும் மைக்ரோ சிப் ஆகும்.
கணனியில் சிபியூ மெமரி, ஹாட் டிஸ்க் என்பன எவ்வகையான பணிகளை மேற்கொள்கின்றன என்பதைப் பலரும் அறிந்திருப்பர். எனினும் இந்த சிப்செட் என்றால் என்ன அதன் முக்கியத்துவம் என்ன என்பதை அநேகர் அறிந்திருப்பதில்லை. சிப்செட் என்பதில் உள்ள ‘சி’ யிற்கு முன்னாள் ஒரு ‘ச்’ சேர்த்து உச்சரியுங்கள்.
ஆரம்ப கால தனி நபர் கணனி மதர்போர்டுகளில் ஒவ்வொரு செயற்பாட்டிற்குமென தனியான சிப்ஸ்கள் பொருத்தப்பட்டு வெளிவந்தன. எனவே கணனியை இயங்க வைப்பதற்குத் தேவையான மின்சுற்றை உருவாக்குவதற்கு ஏராளமான சிப்ஸ்கள் தேவைப்பட்டதோடு மதர்போர்டின் அளவும் கூட பெரிதாக இருந்தது.
பின்னர் சிப் தயாரிப்பாளர்கள் பல சிப்ஸ்களை ஒரு பெரிய சிப்பாக ஒன்றிணைத்து வடிவமைத்தனர். பல சிறிய சிப்ஸ்களுக்குப் பதிலாக ஒரு சில பெரிய சிப்ஸ்களைக் கொண்டு மதர்போர்டை உருவாக்கினர். இவ்வாறு பல சிப்புகளை ஒன்றிணைக்கும் தொழில் நுட்பம் படிப்படியாக வளர ஆரம்பித்ததும் பல சிப்புகளுக்குப் பதிலாக இரண்டு பெரிய சிப்ஸ் அல்லது ஒரே ஒரு பெரிய சிப்பைக் கொண்டு மதர்போர்டுகள் அறிமுகமாகின.
சிப்செட்டுகளை Intel. VIA, SIS, ATI, NVIDIA, OPTI என பல நிறுவனங்கள் தயாரிக்கின்றன. intel நிறுவனம் தயாரிக்கும் க்ரோஸெஸ்ஸர் போன்று அதன் சிப்செட்டும் அதிக பிரசித்தம் பெற்றது. மதர்போர்ட் தயாரிக்கும் நிறுவனங்களே சிப்செட்டுக்களையும் தயாரிப்பதாக நீங்கள் எண்ணக் கூடாது. உதாரணமாக ஒரு மதர்போர்ட் தயாரிக்கும் நிறுவனம் இண்டெல் நிறுவனத்தின் சிப்செட்டை தமது மதர்போர்டில் பயன்படுத்தியிருக்கலாம். இதற்காக அந்த மதர்போர்டை இண்டெல் நிறுவனமே தயாரித்ததாக தவறாக எண்ணி விடாதீர்கள்.
கணனியின் செயற் திறனில் சிப்செட் என்பதன் பங்குதான் என்ன?
ஒரு கணனி வாங்கும் போது நாம் ப்ரோஸெஸ்ஸர், மெமரி, ஹாட் டிஸ்க் என்பவற்றிற்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுக்கிறோம். கணனியில் பொருத்தப்பட்டுள்ள மதர்போட் என்ன அதிலுள்ள சிப்செட் ரகம் என்ன. அது எவ்வகையான ப்ரோஸெஸ்சர்களை ஆதரிக்கும் எந்த அளவிலான நினைவகத்தை ஆதரிக்கும் என்பன போன்ற விடயங்களையிட்டு நாம் கவலைப்படுவதில்லை. ஆனால் இந்த சிப்செட்டே நாம் பயன்படுத்தக் கூடிய ப்ரோஸெஸ்ஸர், மெமரி, ஹாட் டிஸ்க் என்பவற்றின் வேகம் கொள்ளவு என்பவற்றைத் தீர்மானிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ப்ரோஸெஸ்ஸர், நினைவனம், உள்Zடு மற்றும் வெளியீடு செய்யும் சாதனங்கள் போன்றவற்றினிடையே தொடர்பாடலை மேற்கொள்வதிலும் டேட்டா பரிமாற்ற வேகத்தை தீர்மானிப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் சிப்செட்கள் பிரதான பங்கு வகிக்கின்றன.
இவை இரண்டிலும் ஒரு கணனியின் செயற்பாட்டில் North Bridge மிக முக்கிய பங்காற்றுகிறது. இது சிபியுவுடன் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும். சிபியு மற்றும் நினைவகத்தினிடையே தொடர்பாடலை மேற்கொள்ள North Bridge உதவுகிறது. சிபியூ வானது பிரதான நினைவகத்தையோ அல்லது வீடியோ கார்டைடோ நேரடியாக அணுகுவதில்லை. நேர்த பிரிட்ஜே மூலமாகவே அப்பகுதிகளை அணுகுகிறது. ப்ரோஸெஸ்ஸசரின் வகை அதன் வேகம். நினைவகத்தின் வகை. அதன் அளவு போன்றவற்றையும் North Bridge தீர்மானிக்கிறது.
South Bridge ஆனது சிபியுடன் நேரடியாக இணைக்கப்படுவதில்லை. இது Norht Bridge உடன் தொடர்புபற்றிருக்கும் அதே வேளை கணனியிவல் உள்Zடு மற்றும் வெளியீட்டு சாதனங்களுக்குப் பொறுப்பாகப் பணியாற்றுகிறது.
உங்கள் கணனியில் பொருத்தப்பட்டுள்ள சிப்செட்டின் வகையென்ன என்பதை அறிந்துகொள்ள விரும்புகிaர்களா? விண்டோஸ் எக்ஸ்பீ இயங்கு தளத்தில் சிப்செட் விவரங்களைப் பார்வையிடுவதற்கு மை கம்பியூட்டர் ஐக்கன் மேல் ரைக் க்ளிக் செய்து வரும் மெனுவில் Properhes தெரிவு செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் ஹாட்வெயார் டேபின் கீழ் Device Manager தெரிவு செய்து அங்கு System devices என்பதற்கு இடப்புறம் உள்ள (+) குறியீட்டில் க்ளிக் செய்து அதனை விரித்தால் அங்கு ALI, AMD, Intel Nvidia, VIA, Sis என ஏதேனும் ஒரு சிப்செட் வகையின் பெயரைக் காணலாம். சிப்செட் ட்ரைவர் முறைப்படி நிறுவியிருந்தால் மாத்திரமே இந்த விவரங்களைக் காண்பிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
Tags
COMPUTER