உலகலாவிய ரீதியாக அநேகமாக ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ள கணனிகளின் வலையமைப்பு ஆகும்.
இன்டனெட்டுக்கு பின்னால் பல தொழிநுட்பங்கள் உண்டு. ஆனால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இந்த அனைத்துக் கணனிகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது என்பதையும் அவை ஒன்றோடொன்று பேசிக் கொள்ளவும் முடியும் என்பதையும் ஆகும்.
மாஸ்டர் கணனிக்கோ அல்லது இன்டனெட்டுக்கோ இல்லம் என்று எதுவுமில்லை. அது வெறுமனே உலகம் முழுவதும் காணப்படுகின்ற உலகலாவிய பல தகவல்களைப் கொண்ட ஒற்றோடொன்று இணைந்துள்ள பல கணனிகளாகும். உங்களுக்கு இன்டனெட்டுக்கான பிரவேசம் இருப்பின் உங்களுடைய கணனியிடம் இருந்தே நீங்கள் வாசிக்கும், கேட்கும், பார்க்கும் மற்றும் அனைத்து தகவல்களையும் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும்
கணனி நிபுணர்கள் எச்.டி.எம்.எல். எனும் சிக்கலான நிகழ்ச்சி மொழியினை விருத்திசெய்திருப்பதனூடாக இது நடைபெறுகின்றது. அதிர்ஷ்டவசமாக அந்த மொழியை நீங்கள் அறிந்திருக்க வேண்டியதில்லை. ஏனெனில் உங்களுடைய கணனி உங்களுக்காக அந்த மொழியை மொழிபெயர்த்து வழங்குகின்றது.
வெப் பேஜஸ் என்றழைக்கப்படுகின்ற பக்கங்களை ஒவ்வொருவரும் தனது கணனியிலேயே வாசிக்கக் கூடியவாறு தகவல்கள் அடங்கிய பக்கங்கள் தான் என்றால் அது போதும் ஒரே நபரின் அல்லது அமைப்பின் ஒன்றாகக் காணப்படும் பல பக்கங்கள் ஒரு பத்தகத்தை ஆகக்கூடிய பக்கங்களைப் போன்றவையாகும் இதனால்தான் வலையமைப்பை சிலர் உலகத்தின் பெரிய வாசிகசாலை என்று கூறுகின்றார்கள்
ஆனால் இந்த உலக வாசிகசாலையானது, ஏனைய சாதாரண வாசிகசாலைகளைப் போலல்ல. ஏனெனில் அங்கு உங்களுக்கு உரைகள், சத்தம், படங்கள், வீடியோக்கள் மற்றும் கடைகள் போன்றனவும் கிடைக்கும்.
மொடெம் என்று அழைக்கப்படுகின்ற ஒரு விஷேட கணனி சாதனத்துடன் ஒரு தொலைபேசி இணைப்பின் ஊடாக உங்களுடைய கணனியை இன்டனெட்டுடன் இணைப்பதன் ஊடாக மக்கள் உலகில் எங்கிருந்தாலும் அவர்களுக்கு இந்த இணையத்தளங்களைப் பார்வையிட முடியும். இது ஒரு சிக்கலான அல்லது உபாயமான ஒரு செயற்பாடாகத் தெரிந்தபோதிலும் மக்களுக்கு அவர்களுடைய தகவல்களை வலையமைப்பில் உலாவ விட முடியும். கடைகளும் கூட இன்டனெட்டில் உலாவுகின்றன. ஆகவே மக்கள் அதற்கான பிரவேசத்தைப் பெறுகின்றார்கள். நீங்கள் அவை இரண்டையும் எவ்வாறு செய்வதென்று நான் உங்களுக்கு சீக்கிரம் காட்டுகின்றேன்.
அதிகதிகமான மக்கள் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் விநோதங்களுக்காகவும், ஷொபின் செய்வதற்கும் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்வதற்கும் வலையமைப்பைப் பயன்படுத்துகின்றனர்.
ஆய்வுகளின் படி பல்லாயிரக்கணக்கான மக்கள் தொலைகாட்சி பார்ப்பதற்கும் இணையத்தையே விரும்புகின்றனர்.
உதாரணமாக சில ஆய்வுகளின் படி அமெரிக்காவில் இருக்கும் கணனி பாவனையாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தமது வலையமைப்பிற்காக தொலைக்காட்சியைக் கூட கைவிடக் கூடியவர்களாக இருக்கின்றனர். (ஆபிட்றன் / எடிசன் மீடியா ரீசேர்ச்)
இன்டனெட்டு எவ்வாறு ஒரு முக்கியமான விடயமாக ஆகியுள்ளது என்பதை நீங்கள் இதனை விட தெளிவாக நிரூபிக்க முடியாது.