பிடிஎப்-பில் பாஸ்வேர்ட் இடலாம்

வணக்கம் நண்பர்களே கடந்த சில பல நாட்களாக வேலைப்பளுவின் இறுக்கத்தில் வலைத்தளம் பக்கம் வர முடியவில்லை அப்படி பெரிதாக எதிர்பார்க்கும் அளவிற்கு நான் பெரிதாக ஒன்றும் எழுதிவிட போவதில்லை இருந்தாலு இறுக்கத்தை தளர்த்த ஒரு போதை அவசியமாகிறது அதிலும் எனக்கு ஏதாவது ஒன்றை எழுதுவதில் விருப்பம் உள்ளவன், அதனாலேயே இன்று எப்படியும் எழுதிவிடவேண்டும் என்பதற்காக ஒரு குட்டி பதிவை எழுதுகிறேன் ஆனாலும் இது உபயோகமாக இருக்கும்.

நம்மில் பிடிஎப் பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவாக இருப்பார்கள் இந்த பிடிஎப் பல காரணங்களுக்காக பயன்படுத்த படுகிறதென்றாலும் குறிப்பாக நம் தமிழ் மக்களுக்கு நல்ல வசதியை தருகிறது நம்மிடம் இருக்கும் ஒரு தமிழ் டாக்குமெண்டை நண்பர் ஒருவருக்கு நேரடியாக எக்‌ஷெல் அல்லது வேர்டு பைலாக அனுப்பினால் ஒருவேளை அவர் கணினியில் தமிழை படிக்க முடியாமல் போகும் அதே நேரத்தில் அந்த பைலை பிடிஎப் ஆக மாற்றிவிட்டால் யாரும் எழுத்துரு பிரச்சினை இல்லாமல் எழுதில் படிக்க முடியும் இதை பற்றி ஏற்கனவே நான் இங்கு ஒரு பதிவை எழுதியிருக்கிறேன் படித்து பாருங்கள் இந்த பதிவிலேயே நிறைய விஷயங்கள் இருக்கும்.

நாம் சில காரணங்களுக்காக நமது பிடிஎப் பைலை பாஸ்வேர்ட் இட்டு பாதுகாக்க நினைப்போம் அதற்காகத்தான் இந்த பிடிஎப் செக்குயூரிட்டி தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் இது ஒரு போர்ட்டபிள் மென்பொருள் இதை பயன்படுத்தி எளிதாக பாஸ்வேர்ட் இட்டு வைக்கலாம் அதற்கான படங்களை இனைத்துள்ளேன் பாருங்கள் புரியும். இந்த மென்பொருளை Avira AntiVirus வைரஸ் எச்சரிக்கை செய்கிறது ஆனால் AVG, NOD32, Norton போன்றவற்றில் எந்தவித எச்சரிக்கை செய்தியும் இல்லை மேலும் நான் ஆன்லைன் சோதனையும் செய்து பார்த்துவிட்டேன். 





என்ன நண்பர்களே விரிவாக எழுதமுடியவில்லை மன்னிக்கவும் மேலும் இந்த பாஸ்வேர்ட் இட்டாலும் இதையும் திறக்கும் மென்பொருள்கள் இருக்கின்றன முடிந்தால் நாளை அல்லது விரைவில் அதை பற்றியும் ஒரு பதிவு எழுதுகிறேன் என்ன எல்லா தொழில்நுட்பத்திலும் எதிர்மறைகளும் இருக்கின்றன. பதிவு பிடித்திருந்தால் அவசியம் வாக்கும் பதிவை பற்றிய கருத்துரையும் அளிப்பதன் மூலம் மேலும் சிலரை சென்றடைய உதவலாமே.

குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். 

Post a Comment

Previous Post Next Post