நீங்களும் இசையோடு பாடலாம்

நாம் எல்லோருமே ஏதாவது பிடித்தமான பாடல் கேக்கும்போது நம்மையும் அறியாமால் பாடிவிடுவோம் சிலரின் குரல் இனிமையாக இருக்கும் சிலருக்கு குரல் கரகரப்பாக இருக்கும் இருந்தாலும் எல்லோருக்குமே பாடல் படிக்க விருப்பம் இருக்கும் அதிலும் பெரிய இசை மேதைகளின் இசையில் நமது குரலும் ஒலித்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் சரி நாம ஆசைப்படுறதெல்லாம் நடக்கவா செய்யுது சரி இனையத்தில் கிடைக்கும் கரோக்கி பாடல்களை தரவிறக்கி நாம் நாமாகவே அவர்கள் இசையில் பாடினால் என்ன? பின்னனியில் பாடலாம் அதற்கான மென்பொருள் தொகுப்புகள் இனையத்தில் கிடைக்கின்றன ஆனால் எல்லாம் டாலர் சரி நல்லா பாடுறவங்களுக்கு இது தடையாய் இருக்ககூடாது நேரடியா இசையமைப்பாளர்களின் முன்னிலையில் பாடுவேன் என இருந்தால் உடனே நடக்கிற காரியமா? யூடியூப்-ல் பாருங்கள் நிறைய பேர் தங்களின் சொந்த குரலில் பாடி வலையேற்றியிருக்கிறார்கள் அதில் அவர்களின் திறமையையும் வெளிக்காடியிருக்கிறார்கள், யாருக்கு தெரியும் இந்த முயற்சி உங்கள் இசைபயணத்தின் தொடக்கமாககூட இருக்கலாம் சரி இதுக்காக பணம் கொடுத்தெல்லாம் மென்பொருள் வாங்கவேணாம் இலவசமாக ஆடியோசிட்டி எனும் மென்பொருள் இருக்கிறது இலவசம் என்பதற்காக குறைத்து மதிப்பிடவேண்டாம்
இனி நீங்கள் Audacity தளம் சென்று படத்தில் நான் சிவப்பு நிறம் கொண்டு அடையாளம் காண்பித்துள்ள இரண்டு பைலகளையும் தரவிறக்கி அதில் இன்ஸ்டாலேசன் செய்வதற்கான .EXE பைலை தங்கள் கணிணியில் நிறுவிக்கொள்ளவும் எல்லாமே வழக்கம்போலத்தான் கணிணியில் நிருவிக்கொளவதில் பிரச்சினை ஒன்றும் இருக்காது நிறுவி முடித்த்தும் புரோக்கிராமினை இயக்க தொடங்குங்கள்



கீழே இருக்கும் படத்தை பருங்கள் அதில் உள்ளது போல Edit எனபதை தேர்வு செய்து Preference என்பதை தேர்ந்தெடுத்து Play other tracks while recording new one என்பதற்கு அருகில் உள்ள கட்டத்தில் டிக் மார்க் கொடுத்து ஓக்கே கொடுக்கவும்



இனி அடுத்ததாக கீழே இருக்கும் படத்தை பாருங்கள் Project எனபதை Import Audio என்பதை கிளிக்கியவுடன் புதிதாய் திறக்கும் விண்டோவில் உங்களுக்கு பிடித்தமான பாடலை பிரவுஸ் செய்து பாடலை உள்ளிடவும்



இனி கீழே படத்தில் உள்ளது போல வந்திருக்கும்



இதுதான் இனி நீங்கள் பாடப்போகும் பகுதி படத்தில் அடையாளம் காண்பித்துள்ள இரண்டு ரேடியோ பட்டனை பாருங்கள் முதலாவது ரேடியோ பட்டன் ரெக்கார்டிங் (அவசியம் ஹெட்போன் தேவை) இரண்டாவது ரேடியோ பட்டன் ரெக்கார்டிங் நிறுத்துவதற்காக நீங்கள் ஹெட்போன் வழியாக பாட்தொடன்கியதும் கீழே ஒரு புதிய விண்டோ திறக்கும் படத்தை பாருங்கள் நான் பகுதியிலே நிறுத்திவிட்டதால் சிறிய ஒலி அலைகள் இருக்கும் நீங்கள் முழுவதும் பாடும்போது மேலே உள்ள ஒலி அளவுக்கு கீழேயும் வந்துவிடும் பாடி முடித்தவுடன் ரெக்கார்டிங் ரேடியோ பட்டனை நிறுத்த மறக்க வேண்டாம்



ரெக்கார்டிங் முடிந்து உங்கள் சொந்த குரலிலே இசையோடு பாடியாகிவிட்டது இனி அதை சேமிக்க வேண்டுமே அதற்கு File மெனுவில் Export As MP3 அல்லது Export As WMV என்பதை தேர்ந்தெடுக்கவும் நான் Export As MP3 எனபதை தேர்ந்தெடுத்திருக்கிறேன் உங்களுக்கு விருப்பமானதை நீங்கள் தேர்ந்தெடுங்கள் இனி புதிதாக ஒரு விண்டோ திறக்கும் அதில் SAVE எனும் வசதி இருந்தாலும் உங்களால் சேமிக்கமுடியாது அதற்கு நாம் முன்னமே தரவிறக்கிய lame_enc.dll என்கிற சப்போர்ட்டிங் பைலை பிரவுஸ் செய்து உள்ளிடவும் இனி சேமிப்பதில் தடை இருக்காது உங்களுக்கு விருப்பமான பெயர் கொடுத்து ஏதாவது ஒரு டிரைவில் சேமித்துக்கொள்ளவும்



நீங்கள் சேமித்து முடிந்தவுடன் கீழே உள்ள விண்டோ ஒன்று திறக்கும் அதில் உங்களுக்கு தேவையென்றால் விபரங்களை பூர்த்தி செய்யவும் தேவையில்லையென்றாலும் விட்டுவிடலாம்



என்ன ப்பிரியப்பட்ட நண்பர்களே நீங்கள் பாட முடிவெடுத்து விட்டீர்களா சரி இப்பொழுதே தொடங்குகள் இந்த ஆடாசிட்டி மென்பொருளில் நிறைய வசதிகள் இருக்கிறது பயன்படுத்தி பாருங்கள் குறைந்தபட்சம் உங்கள் வீட்டில் உள்ளவர்கள், உறவினர்கள், நண்பர்கள இவர்களுக்காவது உங்கள் திறமை வெளிப்படட்டுமே யாருக்கு தெரியும் ஒருவேளை நீங்கள் இதன் மூலம் பிரபலமாகக் கூட ஆகலாம் சந்தேகம் இருப்பின் கருத்துரையிடவும் 

கரோக்கி பாடல் கிடைக்கும் தளங்கள்
smashits , tamilkaraoke , music.pz10 , punchapaadam , music.cooltoad , karaokemusicindia ,tamilkaraokeclub , tamilkaraoke , makemykaraoke , tamilkaraokecds , meragana , tamilmidi ,paraparapu , tamilkaraokeworld , iniyathamizh


குறிப்பு : சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

Post a Comment

Previous Post Next Post