விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வரை உள்ள அனைத்து கணினியின் வேகத்தையும் அதிகப்படுத்தலாம்.


விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வ்ரை உள்ள அனைத்து
கணினியிலும் தேவையில்லாத DLL கோப்புகள் மற்றும்  தேவையற்ற
கோப்புகளை எளிதாக நீக்கி நம் கணினியை Super Fast எப்படி
செய்யலாம் என்பதைப்பற்றித்தான் இந்த பதிவு.
இண்டெர்நெட் வேகபடுத்த நாம் கொடுத்த வழிமுறை winxp மட்டுமே
பொருந்தும் என்ற செய்தியால் பலரும் அனைத்து வின்டோஸ்
ஆப்ரேட்டிங் சிஸ்டத்திலும் பயன்படுமாறு கூறுங்கள் என்று கேட்டதால்
இனி நாம் கொடுக்கும் வழிமுறைகள் எந்த ஆப்ரேட்டிங் சிஸ்டத்துக்கு
துனை செய்யும் என்பதையும் கூடுமானவரை அனைத்து விண்டோஸ்
ஆப்ரேட்டிங் சிஸ்டத்துக்கும் பொருந்தும் படியும் கொடுக்க முயற்ச்சி
செய்கிறோம். விண்டோஸ் xp முதல் விண்டோஸ் 7 வரை உள்ள
அனைத்து ஆப்ரேட்டிங் சிஸ்டத்திலும் கணினியின் வேகத்தை
அதிகப்படுத்தலாம் இதற்க்காக பிரேத்யேகமாக ஒரு மென்பொருள்
வந்துள்ளது. இந்த மென்பொருளின் துனை கொண்டு நாம் நம்
கணினியில் உள்ள தேவையில்லாத Dll கோப்புகள் மற்றும் ஒரே
பெயரில் இருக்கும் Dublicate Dll கோப்புகளை எளிதாக நீக்கி நம்
கணினியின் வேகத்தை அதிகப்படுத்தலாம். அதிகமான பேர்
பயன்படுத்தும் CCleaner என்ற மென்பொருளின் மூலம் Temporary
கோப்புகளையும் Registry ஐயும் Fix செய்யலாம் ஆனால் இந்த
மென்பொருளின் துனை கொண்டு நாம் நம் கணினியில் உள்ள
தேவையில்லாத Dll  கோப்புகள் மற்றும் ஒரே பெயரில் இருக்கும்
Dublicate Dll கோப்புகளை எளிதாக நீக்கி நம் கணினியின் வேகத்தை
அதிகப்படுத்தலாம். மென்பொருளின் பெயர் PC Cleaner இந்த
மென்பொருளை இந்த முகவரியில் இருந்து தரவிரக்கி கொள்ளலாம்.
http://www.softpedia.com/progDownload/Pc-Cleaner-Download-2024.html
கண்டிப்பாக இந்த மென்பொருள் உங்கள் கணியின் வேகத்தை
அதிகப்படுத்திக்கொடுக்கும்.

Post a Comment

Previous Post Next Post