எழுத்துக்களில் CSS – பயன்படுத்தி மாயாஜாலம் செய்யலாம் உதவும் பயனுள்ள தளம்.


போட்டோஷாப் கோப்புகளைப் பயன்படுத்தி தான் நாம் எழுத்துக்களில் மாயாஜாலம் செய்ய வேண்டும் என்பதில்லாமல் எளிய CSS Code -ஐ பயன்படுத்தி நாம் எழுத்துக்களில் அழகை புகுத்தலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
இணையத்தில் சில இடங்களில் பயன்படுத்தும் எழுத்துக்கள் சரியாக தெரியாமல் இருக்கும் இதற்காக நாம் அந்த இடங்களில் ஒரு JPG படம் போட்டோஷாப் மூலம் உருவாக்கி பயன்படுத்துவோம் ஆனால் இனி எளிதாக ஆன்லைன் மூலம் இதற்காக CSS உருவாக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு பயனுள்ள தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.wordpressthemeshock.com/css-text-shadow/
இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி எழுத்திருக்கும் கட்டத்திற்குள் சொடுக்கி நாம் தட்டச்சு செய்ய வேண்டிய வார்த்தையை கொடுக்க வேண்டும் அடுத்து எந்த எஃபெக்ட் வேண்டுமோ ஒவ்வொன்றாக சொடுக்கி எது பிடித்திருக்கிறதோ அதை வைக்லாம், Font Family என்பதை சொடுக்கி எந்த வகையான எழுத்துரு நன்றாக இருக்கிறதோ அதையும் தேர்ந்தெடுத்துவிட்டு Get code என்ற  பொத்தானை சொடுக்கினால் தெரியும் Code -ஐ காப்பி செய்து  எந்த இடத்தில் வேண்டுமோ அங்கு பேஸ்ட் செய்து பயன்படுத்தலாம். எளிதாக நாமும் CSS மூலம் அழகான டிசைன் இது போல் உருவாக்கலாம். CSS பற்றி தெரியாதவர்களுக்கும் CSS பற்றி அறிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Post a Comment

Previous Post Next Post