கணினியில் பைல்களை(FILE) தானாகவே சேமிக்கும் மென்பொருள்

உங்கள்  கணினியில் நீங்கள் ஏதாவது முக்கியமான பணிகள்  செய்து கொண்டிருக்கும்  போது திடிரென  மின்தடை அல்லது  வேறுகாரணங்களால் உங்களால் அந்த பைல்களை  சேமிக்க முடியாமல் போகலாம் அவ்வாறு நடக்கும் சந்தர்ப்பத்தில்  பயன்படும் SOFTWARE ஒன்றை பற்றி இந்த பதிவில்   பார்க்கப் போகிறோம். பலர் என்னிடம் கேட்ட இந்த சாப்ட்வேரை அனைவரும் அறிந்து கொள்ள இங்கே பதிவிடுகின்றேன்.பைல்களை இசை,புகைப்படம்,டாக்குமெண்ட் என இதில் மூன்றாக பிரித்துள்ளார்கள்.நாம் செய்யும் வேலையில் எதனை சேமிக்க வேண்டுமோ அதனை சேமித்துக்கொள்ளலாம்.



 மேலும் சேமிப்பதை பென்டிரைவ்,நமது கம்யூட்டரிலேயே வேறு டிரைவ்,எக்ஸ்டர்னல் ஹார்ட் டிரைவ் என சேமிக்கலாம். மாதிரி தொகுப்பாவும்(TRAIL SOFTWARE) 9 எம.பி. கெர்ள்ளளவும் கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய     இங்கு கிளிக்       செய்யவும். இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


AUTO SAVE YOUR FILES
இதில நீங்கள் எந்த பைலை சேமிக்க விரும்புகின்றீர்களோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

AUTO SAVE YOUR FILES
சேமிக்க விரும்பும் இடத்தையும் தேர்வு செய்யுங்கள். நான் டி -டிரைவை தேர்வு செய்துள்ளேன்.



நீங்கள் சேமிக்க விரும்பும் நாட்களை தேர்வு செய்யலாம். அதைப்போல உங்களுக்கு தொடர்ந்து சேமிக்க வேண்டுமா - தினந்தோறும் - வாரம் ஒரு முறை - மாதம் ஒரு முறை - கம்யூட்டர் தொடங்கும் போது - ஒவவோரு பணி முடிக்கும் போது என எவ்வாறு வேண்டுமோ அவ்வாறு செட் செய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
AUTO SAVE YOUR FILES
தேவைப்படும் சமயம் பயன் படுத்தவும் - நிறுத்தி வைக்கவும் - டெலிட் செய்யவும் இதில வசதி உள்ளது.

Post a Comment

Previous Post Next Post