மைக்ரோசொப்ட் வேர்ட் கோப்புக்களை பாதுகாப்புக் கருதி கடவுச்சொற்களை பிரயோகித்து சேமிப்பது வழமையான விடயம் ஆகும். எனினும் சில சந்தர்ப்பங்களில் குறித்த வேர்ட் கோப்பு ஒன்றிற்கு பிரயோகித்த கடவுச்சொல் நினைவின்றி போகலாம். இவ்வாறான நேரங்களில் மறந்த கடவுச்சொல்லை மீட்பதற்கு Word and Excel password recovery மென்பொருள் பயனுள்ளதாக அமைகின்றது. இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளின் உதவியுடன் Excel கோப்புக்களினதும் கடவுச்சொல்லினை மீட்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கீழே படங்களில் காட்டப்பட்டுள்ளவாறு படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் கடவுச்சொல்லினை மீட்க முடியும். தரவிறக்க சுட்டி

மின்னஞ்சல் சேவை வழங்குனர்களில் முன்னணியில் காணப்படும் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் தற்போது விரும்பியவாறு தீம்களை அமைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டில் இருந்தே ஜிமெயிலில் தீம்களை அமைக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
எனினும் இவ்வசதியினூடாக ஜிமெயிலினால் வழங்கப்பட்ட குறிப்பிட்ட சில தீம்களை மட்டுமே அமைத்துக் கொள்ளக் கூடியவாறு காணப்பட்டது.
ஆனால் தற்போது ஒவ்வொரு பயனரும் தாம் விரும்பியவாறு தீம்களை அமைத்துக் கொள்ளக் கூடியவாறு புதிய வசதியினை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post