பேஸ்புக்கில் (Facebook) புதிதாக டைம்லைன் (Timeline) என்ற வசதியை அறிமுகபடுதிருக்கிறார்கள்.பழைய பக்கம் போல் இல்லாமல் நமது டைம்லைன் பக்கம் இப்பொழுது வேறு மாதிரி மாறி உள்ளது.
இந்த வசதி சில பேருக்கு பிடித்திருக்கிறது. சில பேருக்கு பிடிக்கவில்லை. எனக்கு டைம்லைன் வசதி பிடிக்கவில்லை என்று நினைப்பவர்கள் அதனை இப்பொழுது எளிதாக அகற்றி கொள்ளலாம்.
எப்படி என்று பார்போம்...கீழே இருக்கும் இந்த லிங்குக்கு செல்லுங்கள்.
கீழே வந்து நீங்கள் பயன்படுத்தும் ப்ரௌசெர்(Browser) எது என்று பார்த்து அதன் மேல் கிளிக் செய்தால் உங்கள் கணினிக்கு ஒரு Extension தரவிறக்கம் ஆகிவிடும்.பெரும்பாலும் ஜிப் வடிவில் தரவிறக்கம் ஆகும்.
பின்பு அதனை ரன் செய்து உங்கள் கணினியில் Save செய்து வைத்து கொள்ளுங்கள்.வேலை முடிந்தது.பிறகு உங்கள் Browser மூடிவிட்டு புதிதாக திறந்து உங்கள் பேஸ்புக் பக்கம் சென்று பாருங்கள்.பழைய மாதிரி உங்கள் பேஸ்புக் பக்கம் மாறி இருக்கும்.மாறவில்லை என்றால் ஒரு முறை உங்கள் பக்கத்தை Refresh F5 செய்து பாருங்கள்.மாறி விடும்.
நீங்கள் Google chrome பயன்படுத்தினால் திரும்ப டைம்லைன் வசதியை பெற்றுக்கொள்ளலாம் . கீழே படத்தில் உள்ளது போல் இருக்கும் ஐகானை கிளிக் செய்து தேவைபடும்போது திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
உங்கள் நண்பர்கள் இந்த Extension பயன்படுத்தவில்லை என்றால் அவர்களுக்கு உங்கள் பக்கம் டைம்லைன் பக்கம் மாதிரிதான் தெரியும்.