
இது பெரும்பாலும் இணையப்பயன்பாட்டுக்கு PHP யோடு பயன்படுத்த படுகின்றன. இணையப்பயன்பாட்டுக்கு LAMP and WAMP என்ற இரு பேகேஜ்கள் வழியாகவும் பயன்படுத்தலாம்.இவைகளில் mysql,apache server, php மென்பொருள்கள் பொதிந்து தரப்படுகின்றன. இணைய தரவுத்தளத்திற்கு பலரின் விருப்பமாக உள்ள இதனை விண்டோஸ் பயன்பாட்டுக்கும் பயன்படுத்தலாம் என்பது பலருக்கு தெரியாது. Community server மற்றும் Enterprise server என்ற இரு பதிப்புகளில் வெளியிடப்படுகிறது. இதில் Community server தான் இலவசமாக வழங்கப்படுகிறது. தற்போதுள்ள பதிப்பு 5.1 ஆகும். இதில் மற்ற தரவுதளங்களை போல stored procedure, triggers, views,cursors போன்ற எல்லா வசதிகளும் உள்ளது.
திறன் வாய்ந்த இத்தரவுதளத்தை நாம் சாப்ட்வேர் அல்லது ப்ராஜெக்ட் உருவாக்கவும் பயன்படுத்தலாம். mysql server ஐ விண்டோசில் நிறுவ முதலில் கீழ் உள்ள முகவரியில்இருந்து தரவிறக்கவும். http://dev.mysql.com/downloads/mysql/
இதில் உங்கள் கணினி வகைக்கு ஏற்ப நிறுவும் கோப்பை தரவிறக்கி கணினியில் இயக்கவும். Setup type-> complete







மேற்குறிப்பிட்ட வேலைகள் முடிந்ததும் உங்கள் கணினியில் Mysql வெற்றிகரமாக நிறுவப்பட்டுவிட்டது.Start மெனுவில் சென்று Mysql server-> Mysql command line client ஐ தேர்வு செய்தால் வரும் விண்டோவில் நீங்கள் கொடுத்த பாஸ்வோர்டை அடித்து உள்நுழையலாம். பின்னர் நமக்கு தேவையான தரவுத்தள வேலைகளை செய்யலாம்.
Mysql தரவுத்தளத்திற்கு உபயோகப்படும் மென்பொருள்களை ( Gui Tools )
பற்றியும், எப்படி புரோகிராமிங்கில் பயன்படுத்தவது என்பதையும் அடுத்து வரும் பாடத்தில் பார்ப்போம்.

பற்றியும், எப்படி புரோகிராமிங்கில் பயன்படுத்தவது என்பதையும் அடுத்து வரும் பாடத்தில் பார்ப்போம்.