My Documents போல்டரை வேறு டிரைவுக்கு மாற்ற...

உங்கள் கணினியில் My documents போல்டர் வழக்கம் போல "C" டிரைவில்
தான் அமைந்து இருக்கும். நண்பர்கள் எல்லோரும் தங்களது கோப்புகளையோ அல்லதுவேறு ஏதேனும் பைல்களை சேமிக்கும் போது அவை எப்போதும்
My documents போல்டரில் தான் சேமிக்கப்படும். நண்பர்களும் ஏதேனும் அவசரத்தில் சேமித்து விடுவார்கள். அதுவும் நல்லது தான். ஏன் என்றால் நமது பர்சனல் கோப்புகள் ஓரிடத்தில் தான் சேமித்து வைக்க விரும்புவோம். இதனால் ஒன்றும் தீமையும் இல்லை.

ஆனால் எதாவது ஒரு நேரம் , உங்கள் கணினியை Format செய்யும் போது உங்கள் My documents இல் உள்ள கோப்புகள் மீட்டு எடுக்க முடியாமல் போய் விடலாம்.
அல்லது வைரஸ் ஏதேனும் உங்கள் கணினியை செயல் இழக்க செய்து விட்டால்
அந்த நேரத்தில் "C" டிரைவை மீட்பது என்பது கொஞ்சம் கஷ்டமான வேலையாக இருக்கும். அதனால் My documents போல்டரை அப்படியே உங்கள் கணினியில் வேறு டிரைவிற்கு மாற்றி விட்டால் இந்த பிரச்சனை வராது அல்லவா?

1. டெஸ்க் டாப்பில் உள்ள My documents போல்டரை வலது கிளிக் செய்து அதில்
properties என்பதை தேர்வு செய்யுங்கள்.


2. Target என்ற இடத்தில் தற்போதைய My documents இன் முகவரி இருக்கும்நீங்கள்கீழே உள்ள Move என்ற பட்டனை கிளிக் செய்து புதிய முகவரியை
கொடுக்கலாம்.

3. உதாரணமாக நீங்கள் "C" டிரைவில் இருந்து "D" டிரைவிற்கு மாற்றுவதாய் இருந்தால்Target பிரிவில் இப்படி அடிக்க வேண்டும்.

D:\My documents

4. பின்னர் Apply கொடுத்தால் உங்கள் My documents கோப்புகள் எல்லாம் நீங்கள் விரும்பிய டிரைவிற்கு மாறி விடும்.இதற்கு பிறகு Format செய்ய வேண்டி வந்தாலும் உங்கள் My documents கோப்புகள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.நன்றி!

Post a Comment

Previous Post Next Post