கோப்புகளின் அளவை சுருக்கவும் , மொத்தமாக அத்தனை கோப்புகளையும் ஒரே இடத்தில் சேர்க்கவும் நாம் Zip Compress செய்து அனுப்புவோம், சில நேரங்களில் இப்படி நாம் சுருக்கும் கோப்புகளுக்கு கடவுச்சொல் கொடுத்திருப்போம், ஆனால் சில நாட்களுக்கு பின் என்ன கடவுச்சொல் கொடுத்தோம் என்று நினைவிருக்காது அப்படி கடவுச்சொல் மறந்துவிட்ட Zip கோப்புகளின் கடவுச்சொல்லை கொடுக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
இணையத்தில் தனித்தனி கோப்புகளாக அனுப்பாமல் பல நேரங்களில் அனைத்து கோப்புகளையும் ஒன்று சேர்த்து Zip கோப்பாக அனுப்புவது வழக்கம் இப்படி அனுப்புவதால் எந்த சிறிய கோப்புகளும் விடுபடாது கூடவே கடவுச்சொல் கொடுத்தும் வைக்கலாம், கடவுச்சொல் மறந்திவிட்ட Zip கோப்புகளை திறக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
தறவிரக்க முகவரி : http://www.appnimi.com/file/zip-password-unlocker
இத்தளத்திற்கு சென்று Download என்ற பொத்தானை சொடுக்கி இந்த மென்பொருளை இலவசமாக தறவிரக்கலாம். இந்த மென்பொருளை நிறுவி இயக்கியதும் வரும் திரையில் Select என்ற பொத்தானை சொடுக்கி எந்த Zip கோப்பின் கடவுச்சொல்லை கண்டுபிடிக்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்கவும் அடுத்து Destination என்று இருக்கும் கட்டத்திற்குள் எந்த இடத்தில் சேமிக்க வேண்டுமோ அதையும் கொடுத்து Start என்ற பொத்தானை சொடுக்க வேண்டியது தான், ஒவ்வொரு கடவுச்சொல்லை பொருத்தும் நேரம் மாறுபடும் கடவுச்சொல் கண்டுபிடித்த பின் Message என்று சிறிய விண்டோவில் கடவுச்சொல்லை காட்டும். Zip கோப்புகளின் கடவுச்சொல்லை மறந்துவிட்ட நண்பர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.