எக்‌ஷெல் ஒத்த வண்ணங்களின் டேட்டா திருத்தம்

வணக்கம் நண்பர்களே இந்த எக்‌ஷெல் மிகப்பெரிய கடல் நான் பலமுறை வியந்திருக்கிறேன் இதுல இல்லாத வசதி இல்லையென்கிற அளவுக்கு இருக்கும் ஆனால் என்ன நாம் அதில் சில பயன்பாடுகளை தவிர மற்றவற்றை உபயோகிப்பதில்லை காரணம் நமக்கு அதன் அவசியம் ஏற்படாததுதான் நான் இந்த பதிவை எழுதுவதற்கு நேற்று நடந்த நிகழ்ச்சியே காரணம்.

சாதரணமாக பல நிறுவனங்களிலும் ஒரு வித பட்ட தகவல்களை எக்‌ஷெல்லில் செய்து வைப்பது தான் வழக்கமாக இருக்கும் இதற்கு என் நண்பர் பணிபுரியும் நிறுவனமும் விதிவிலக்கல்ல நேற்று நண்பர் ஒருவர் அலைபேசியில் அழைத்து தன்னிடம் மொத்த பணியாளர்களின் பெயர்கள் இருப்பதாகவும் அதில் பலதரப்பட்ட பிரிவுகள் இருக்கிறதென்றும் அந்த பிரிவுகளை அடையாளம் கானும் விதமாக அந்த செல்களில் வண்ணங்கள் கொடுத்திருப்பதாகவும் சொன்னார் சரி அதில் என்ன பிரச்சினை என்கிற போதுதான் ஒவ்வொரு வண்ணத்தில் இருக்கும் பெயர்களுக்கும் ஓரே விதமாக சம்பளத்தை நிர்ணயிப்பதற்காக சம்பளத்தை வரையறை செய்து இவரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். 

பத்தோ அல்லது இருபது என்றால் ஒன்றும் பிரச்சினை இல்லை எளிதாக செய்து விடலாம் ஆனால் ஒரு ஆயிரம் அல்லது ஐயாயிரம் நபர்கள் பணி செய்யும் நிறுவணமாக இருந்தால் கொஞ்சம் கற்பனை பண்ணிபாருங்கள் எவ்வளவு நேரம் ஆகும்? நான் அந்த நண்பருக்கு பரிந்துரைத்தையே இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் இப்போது உங்களிடம் கீழிருக்கும் படத்தில் உள்ளது போல ஒரு பைல் இருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள் இதில் பத்து பெயர்கள் மட்டுமே இருக்கிறது ஆனால் உங்களிடம் இருப்பது பத்தாயிரம் பெயர் கொண்ட பட்டியல்.



இதில் உள்ளது போல செல்லின் நிறம் கொடுத்திருந்தாலும் அல்லது எழுத்தின் நிறம் மட்டுமே கொடுத்திருந்தாலும் இரண்டுக்குமே பொருந்தும் நான் உபயோகபடுத்துவது மைக்ரோசாபட் 2007 ஆனால் இதே வழிமுறைதான் மைக்ரோசாப்ட் 2003 என்ன கொஞ்சம் மெனுவை கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்கும் நீங்கள் மைக்ரோசாப்ட் 2003 உபயோகிப்பவராக இருந்தால் Tools என்பதன் கீழாக Auto Filter என்பதை தெரிவு செய்தால் போதும் ஆட்டோ பில்ட்டர் வந்துவிடும்.



இனி இந்த படத்தில் உள்ளது போல உங்களுக்கு எந்த நிறத்தில் உள்ள பெயர்கள் என்பதை வண்ணத்தை தெரிவு செய்தால் போதும் அந்த வண்ணத்தில் உள்ள தகவல்கள் மட்டுமே காண்பிக்கும் இனி ஏதாவது ஒரு இடத்தில் நீங்கள் மாற்ற வேண்டிய தொகையை மாற்றி அந்த செல்லை தெரிவு செய்து உங்கள் கர்சரை வைத்து கீழே இழுப்பதன் மூலம் நீங்கள் விரும்புவது போல ஒரே நிறத்தில் இருக்கும் டேட்டாக்களின் தொகையை எளிதாக மாற்றிவிடலாம். 



என்ன நண்பர்களை நீங்கள் நினைக்கிறீர்களா நமக்கு தேவையில்லையென்று, அதனால் என்ன தெரிந்து வைத்துக்கொண்டால் உதவுமே நேற்று வரை எனக்கும் இதை பற்றி தெரியாது நண்பனுக்காக நான் தேடியபோதுதான் எனக்கும் இந்த வழிமுறை தெரிந்தது எல்லாம் தெரிந்தவர்கள் இங்கு யாருமில்லை நாம் ஒவ்வொரு நாளும் யாரிடமாவது ஒன்றை கற்றுக்கொண்டு தான் இருக்கிறோம்.தெரியாத விஷயங்களை யார் சொல்லி கொடுத்தால் என்ன கற்றுக்கொள்வதில் தவறில்லை என நினைக்கும் கூட்டத்தில் உங்களோடு நானும், பதிவு பயனுள்ளது என்றால் வாக்கும் கருத்துரையும் அளிப்பதன் மூலம் பலரை சென்றடைய உதவலாமே. 

குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Post a Comment

Previous Post Next Post