ஆங்கிலம் துணுக்குகள் 11

ஆங்கிலம் துணுக்குகள் 11 (Sentence Stress)

ஆங்கிலம் துணுக்குகள் 10 இல் சொல்லழுத்தம் (Word Stress) பற்றிய விளக்கம் பார்த்தோம். அதே போன்றே வாக்கிய அழுத்தப் (Sentence Stress) பயன்பாடுகளையும் சரியாகப் பயின்று பேசுவது மிக முக்கியமானது. இவ் வாக்கிய அழுத்தப் பயன்பாட்டை முறையாகப் பயிற்சி பெறாமல் ஆங்கில மொழியை சரியாக பேசுதலே சாத்தியமற்றது எனலாம்.

இவற்றை பயில்வது கடினமானதா? இல்லை. எதனையும் சரியாக விளங்கிக்கொண்டால் இலகுவாகவே இருக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுக்களைப் பாருங்கள்.

What is your name?
வட் இஸ் யுவர் நேம்?

என்று சொல்லுக்கு சொல் இடைவெளி விட்டு பேசி பழக வேண்டாம். மேலுள்ள வாக்கியத்தில் உள்ள அனைத்து சொற்களையும் ஒரே சொல்லாக “வட்ஸ்யுவர்நேம்?” என பேசிப் பாருங்கள். பேசுவதற்கு இலகுவாகவும் இருக்கும். விரைவில் ஆங்கில பேச்சும் எமது நாவிற்கு எளிதாகவும் புலப்படும்.

அதேவேளை ஒலிப்பில் அழுத்தம் கொடுக்க வேண்டிய இடங்களை அறிந்து அதற்கேற்ப ஏற்ற இறக்கத்துடன்; அழுத்தமாக ஒலிக்க வேண்டிய இடத்தில் அழுத்தமாகவும், மென்மையாக ஒலிக்கப்பட வேண்டிய இடத்தில் மென்மையாகவும் பேசிப் பழகுவது மிகவும் முக்கியமானது. தாய் மொழி ஆங்கிலேயரின் உச்சரிப்பின் பொழுது இடையிடையான சில சொற்கள் உச்சரிக்கப்படாதது போல் (மென்மையாக) பேசப்படுவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். அழுத்தம் குறைவுடன் ஒலிக்கப்படும் சொற்களே அவை.

WHAT is YOUNAME?
வட்ஸ் யுவர் நேம்?

WHERE are you STAYing?
வெயாராயூ ஸ்டேயிங்?

HOW LONG have you been STAYing in HONG KONG?
ஹவ்லோங் ஹேவ்யூபீன் ஸ்டேயிங்ன் ஹொங்கொங்?

வாக்கிய அழுத்த அடிப்படை விதிமுறைகள்

முக்கியாமாக ஒரு வாக்கியத்தில் இரண்டு வகையாக சொற்கள் ஒலிக்கப்படுகின்றன.

Content Words - (கனமாக) சொல்லழுத்தச் சொற்கள்
Structure Words - சொல்லழுத்தமற்ற சொற்கள் (இவைகளே ஒரு வாக்கியத்தின் அமைப்பை முழுமைப்படுத்துக்கின்றன.)

ஒரு வாக்கியத்தில் சொல்லழுத்தச் சொற்களே (Content Words) பிரதான இடத்தை வகிக்கின்றன. அவைகளே ஒருவர் சொல்வது என்ன எனும் பொருளை விளக்குபவை.

எடுத்துக்காட்டாக:

I + GO + SCHOOL + BUS என்று நீங்கள் ஒருவரிடம் கூறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அப்பொழுது உங்கள் பேச்சை கேட்பவர் உங்கள் முகக் குறிப்புகளையும், உங்கள் அங்க அசைவுகளை (செய்கைகளை) வைத்தும் நீங்கள் என்ன பேசுகின்றீர்கள் என்பதை புரிந்துக்கொள்வார்.

I am GOing to SCHOOL by BUS.
“ஐ’ம் கோயிங்டு-ஸ்கூல் bபைபஸ்” என்று கூறுவீர்களானால் வாக்கிய அமைப்பு முழுமையானதாக இருக்கும். அதேவேளை இடையில் பயன்படும் சொற்களே அழுத்தமற்று பேசப்பட வேண்டியவை என்பதையும் புரிந்துக்கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

இவற்றை எளிதாக எவ்வாறு அறிந்துக்கொள்ளலாம் என்பதை கீழே பாருங்கள்.

அழுத்தமின்றி (மென்மையாக) ஒலிக்கபட வேண்டிய சொற்கள்:

PronounsIt, his, her, we

PrepositionsAt, in, on

ArticlesA, an, the

ConjunctionsBut, because, and

Auxiliary verbsIs, are, be, can

அழுத்தமாக ஒலிக்க வேண்டிய சொற்கள்:

Main VerbsGO, COME, GIVE

Negative Auxiliary verbs
DON’T, DOESN’T, DIDN’T, CAN’T

NounsSARMILAN, BUS, SCHOOL, ENGLISH

AdjectivesBLUE, SMALL, CLAVER

Adverbs
USUALLY, ACTUALLY, QUICKLY,

இவற்றை முறையாக பயில்வதன் நன்மைகள்?

தாய் மொழி ஆங்கிலேயரின் விரைவான ஆங்கில ஒலிப்புக்களை எளிதாக விளங்கிக்கொள்ளல். நாமும் இந்த வாக்கிய அழுத்த முறைமைகளை சீக்கிரமே புரிந்துக்கொள்ளல். நாமும் ஆங்கிலேயருக்கு நிகரான ஆங்கில பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ளல். நம்மில் பலர் ஆங்கில இலக்கணம் கற்றவர்களாக இருந்தும், பொது இடங்களில் ஆங்கிலத்தில் பேசுவதற்கு கூச்சப்படும் பலர் இருக்கின்றனர். அவ்வாரானவர்களும் இவ் வாக்கிய அழுத்த முறைமைகளை விளங்கிக்கொள்வதன் ஊடாக பலர் மத்தியில் தடங்களின்றியும் கூச்சமின்றியும் பேசும் ஆற்றலை உருவாக்கிக் கொள்ளலாம்.

எனவே ஒரு வாக்கியத்தின் "வாக்கிய அழுத்தம்" எந்தெந்த இடங்களில் பயன்பட வேண்டும் என்பதை அறிந்துக்கொள்வது சிறந்தது அல்லவா?

Download As PDF

Post a Comment

Previous Post Next Post