ஆங்கில பாடப் பயிற்சி 09

ஆங்கிலம் பயிற்சி அட்டவணை (Irregular verbs)

இன்றைய ஆங்கில பாடப் பயிற்சியாக நாம் "Irregular verbs" அட்டவணையை பயிற்சி செய்யப் போகின்றோம். இது எமது அடுத்த பாடமான "ஆங்கில பாடப் பயிற்சி 10" க்கு அவசியமானது என்பதால் இதனை இன்று கொடுக்கின்றோம்.

"Irregular verbs" கள் அட்டவணையை ஆங்கிலம் உதவி பக்கமும் இட்டுள்ளோம். நீங்கள் விரும்பினால் http://aangilam.page.tl/Irregular-verbs.htm பக்கம் சென்றும் பார்க்கலாம். அவற்றை ஸ்க்ரீன் சொட் எடுத்தே இங்கு இட்டுள்ளோம்.

பிழையற்ற உச்சரிப்பு பயிற்சிக்கு கீழே இணைக்கப் பட்டிருக்கும் ஒலிக்கோப்பினைச் சொடுக்கி பயிற்சி பெறலாம்.

irregular vers.mp3








இந்த "Irregular verbs" களை மனப்பாடம் செய்துக்கொள்வது மிகவும் அவசியமானதாகும். நாம் பிழையின்றி ஆங்கிலம் பேச, எழுத விரும்பினால் நாம் இவற்றை முறையாகக் கற்பதே சிறந்த வழியாகும். எமது அடுத்த பாடப் பயிற்சியின் போது நாம் இறந்தக்கால (Past Tense) பயிற்சிகளைத் தொடர இருப்பதால் இவற்றை இன்றே மனப்பாடம் செய்துக்கொள்வது எளிதாக இருக்கும்.

மற்றும் எதிர்வரும் "Passive Voice" பாடங்களின் போதும் இந்த "Irregular verbs" அட்டவணை அவசியப்படும்.

எனவே கட்டாயம் மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். ஆங்கிலக் கல்வி அத்தியாவசியம் ஆகிவிட்ட இக்காலச் சூழமைவில் நாம் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் கற்பதே இன்றைய உலக ஒழுங்கில் எதிர் நீச்சல் போடுவதற்கு ஏற்றதாக இருக்கும்.

குறிப்பு:

இந்த "ஆங்கிலம்" பாடத்திட்டம் ஒரு ஒருங்கமைக்கப்பட்ட பாடத்திட்டம் ஆகும். இதன் முறையின் படியே பாடங்கள் வழங்கப்படும்.

கேள்விகள் கேட்போர் இந்த ஆங்கில பாடப் பயிற்சிகள் தொடர்பாக எழும் எந்த விதமான சந்தேகங்கள், கேள்விகளாயினும் கேட்கலாம். நீங்கள் அறிய விரும்பும் ஆங்கில சொற்கள் இருப்பின் அவற்றை எழுதுங்கள். அவை எதிர்வரும் பாடங்களுடன் இணைத்து வழங்கப்படும்.

ஆனால் ஒரு ஆங்கிலக் கட்டுரையை தமிழாக்கிக் கேட்பது, ஆங்கிலக் கல்விக்கு சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்பது போன்றவற்றை தவிர்க்கவும்.

ஆங்கிலக் கல்வி, ஆங்கிலம் மொழி தொடர்பில் எந்தவிதமான கேள்விகள் இருப்பினும் தயங்காமல் எழுதுங்கள். உங்கள் கேள்விகளுக்கான பதில் எமது பாடத்திட்டத்திற்குள் உள்ளதொன்றானால், அவற்றை அப்பாடங்களின் போது வழங்கப்படும்.எமது ஆங்கிலப் பாடத்திட்டத்திற்கு உள்ளடங்காத கேள்விகளாக இருப்பின் அவற்றை தொகுத்து பின் "கேள்வி பதில்" பகுதியாக வழங்குவதாக உள்ளோம்.

முடிந்தவரையில் உங்கள் கேள்விகளை தமிழிலேயே எழுதிக் கேளுங்கள். நீங்கள் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டெழுதினாலும், அவற்றுக்கான பதில் தமிழிலேயே வழங்கப்படும்.

சரி பயிற்சிகளை தொடருங்கள். மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

sh Irregular verbs listening practice in Tamil, Download As PDF

Post a Comment

Previous Post Next Post