ஆங்கில பாடப் பயிற்சி 06

ஆங்கில பாடப் பயிற்சி 6 (Grammar Patterns 4)

நாம் ஏற்கெனவே Grammar Patterns 1, 2, 3 களில் ஒரு வாக்கியத்தை; 73 ன்று வாக்கியங்களாக மாற்றி பயிற்சி செய்தோம். இன்று ஒரு "பெயர்ச் சொல்லை" (Noun) அல்லது "சுட்டுப்பெயரை" (Pronoun) உதாரணமாக எடுத்து, அதனை 32 வாக்கியங்களாக மாற்றி, பயிற்சி செய்யும் முறையைப் பார்க்கப் போகின்றோம். இவற்றையே "to be" form என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றது.

இந்த கிரமர் பெட்டர்னையும் வாய்பாடு பாடமாக்குவதுப் போன்று மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள்.
"பெயர்ச்சொல்" என்பது பொருற்கள், நபர்கள், இடங்கள், மிருகங்கள் போன்றவற்றை குறிப்பிடுவதற்கான பெயர்கள் அல்லது சொற்கள் ஆகும். அவற்றை பல்வேறு வகைகளாக பிரித்து கற்பிக்கப்படுகின்றன. அவற்றை கீழுள்ள இணைப்புகளை சொடுக்கி பார்க்கலாம்.

பெயர்சொற்களின் வகைகள் (Types of Nouns)
சுட்டுப்பெயர்களின் வகைகள் (Pronouns)

Sarmilan is a Manager.
சர்மிலன் ஒரு நிர்வாகி.
(சர்மிலன் ஒரு நிர்வாகியாக இருக்கிறார்)

மேலுள்ள வாக்கியத்தைப் பாருங்கள். அதில் "சர்மிலன்" என்பது ஒரு நபரின் பெயராகும். அதாவது பெயர்ச்சொல்லாகும். இந்த "சர்மிலன்" எனும் பெயர் சொல்லை கொண்டு "சர்மிலன் ஒரு நிர்வாகி, சர்மிலன் ஒரு நிர்வாகியாக இருந்தார், ... இருந்திருப்பார், ... இருக்கலாம், ... இருந்திருக்கலாம், ... இருக்கவேண்டும், ... இருந்திருக்கவேண்டும்". என்பதுப்போன்று இந்த கிரமர் பெட்டனை உருவாக்கலாம்.

அதேவேளை "சர்மிலன்" எனும் பெயரைக் குறிப்பிடாமல் அதற்குப் பதிலாக சுட்டுப்பெயரைப் பயன்படுத்தியும் இந்த கிரமர் பெட்டனை உருவாக்க முடியும். நான் இங்கே "சர்மிலன்" எனும் பெயர்ச்சொல்லுக்கு பதிலாக "அவர்" எனும் சுட்டுப்பெயரை பயன்படுத்தி (He is a Manager. - அவர் ஒரு நிர்வாகி) என இக்கிரமர் பெட்டனை உருவாக்கியுள்ளேன். நீங்கள் இரண்டு விதமாகவும் பயிற்சி செய்யுங்கள்.
இது மிகவும் இலகுவான ஒரு பயிற்சி முறையாகும்.
Grammar Patterns 4...
Practice the following Grammar Patterns daily.

1. He is a Manager.
அவர் ஒரு நிர்வாகி.
(அவர் ஒரு நிர்வாகியாக இருக்கிறார்)

2. He can be a Manager
அவர் ஒரு நிர்வாகியாக இருக்க முடியும்.
அவருக்கு ஒரு நிர்வாகியாக இருக்க முடியும்.

3. He was a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருந்தார்.

4. He would have been a Manager
அவர் ஒரு நிர்வாகியாக இருந்திருப்பார்.

5. He may be a Manager
அவர் ஒரு நிர்வாகியாக இருக்கலாம்.

6. He may have been a Manager
அவர் ஒரு நிர்வாகியாக இருந்திருக்கலாம்.

7. He will be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருப்பார்.

8. He must be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருக்கவேண்டும்.

9. He must have been a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருந்திருக்கவேண்டும்.

10. He seems to be a Manager.
அவர் ஒரு நிர்வாகிப் போல் தெரிகின்றது.

11. He doesn't seem to be a Manager.
அவர் ஒரு நிர்வாகிப் போல் தெரிகின்றதில்லை.

12. He seemed to be a Manager.
அவர் ஒரு நிர்வாகிப் போல் தெரிந்தது.

13. He didn't seem to be a Manager.
அவர் ஒரு நிர்வாகிப் போல் தெரியவில்லை.

14. He has to be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக (இருக்க) வேண்டும்.

15. He should be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாகவே (இருக்க) வேண்டும்.

16. He ought to be a Manager.
அவர் எப்படியும் ஒரு நிர்வாகியாகவே வேண்டும்.

17. He doesn’t have to be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக (இருக்க) வேண்டியதில்லை.

18. He needn’t be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக வேண்டிய அவசியமில்லை.

19. He has been a Manager.
சற்றுமுன்பிருந்து/கிட்டடியிலிருந்து அவர் ஒரு நிர்வாகியாக இருக்கின்றார்.

20. He had been a Manager.
அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து அவர் ஒரு நிர்வாகியாக இருந்தார்.

21. He had to be a Manager.
அவருக்கு ஒரு நிர்வாகியாக வேண்டி ஏற்பட்டது.

22. He didn’t have to be a Manager.
அவருக்கு ஒரு நிர்வாகியாக வேண்டி ஏற்படவில்லை.

23. He must not be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக (இருக்க) வேண்டியதில்லை.
அவர் ஒரு நிர்வாகியாகக் கூடாது.

24. He shouldn’t be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருக்கவே வேண்டியதில்லை.
அவர் ஒரு நிர்வாகியாகவே கூடாது.

25. He won't be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக மாட்டார்.

26. He can't be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக முடியாது.
அவருக்கு ஒரு நிர்வாகியாக முடியாது.

27. He could have been a Manager.
அவருக்கு ஒரு நிர்வாகியாக இருக்க இருந்தது.

28. He should have been a Manager.
அவருக்கு ஒரு நிர்வாகியாகவே இருக்க இருந்தது.

29. He ought to have been a Manager.
அவருக்கு எப்படியும் ஒரு நிர்வாகியாகவே இருக்க இருந்தது.

30. He needn't have been a Manager.
அவர் அநியாயம் ஒரு நிர்வாகியானது.

31. He shouldn't have been a Manager.
அவர் அநியாயம் ஒரு நிர்வாகியானது.

32. He being a Manager, he knows the work.
அவர் ஒரு நிர்வாகியாகும் பட்சத்தில் அவருக்கு தெரியும் அதன் வேலைகள்.

Homework:
மேலே நாம் பயிற்சி செய்தது போன்று கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளையும் 32 விதமாக மாற்றி, எழுதியும் வாசித்தும் பயிற்சி செய்யுங்கள்.

She is a nurse.
அவள் ஒரு தாதி.

He is a teacher.
அவர் ஒரு ஆசிரியர்.

She is a domestic helper.
அவள் ஒரு வீட்டுப் பணிப்பெண். (வீட்டு உதவியாளர்)

Karunanithi is a Chief Minister.
கருணாநிதி ஒரு முதலமைச்சர்.

Donald Tsang is a chief executive of Hong Kong.
டொனால்ட் செங் ஹொங்கொங்கின் தலமை நிறைவேற்று அதிகாரி.

குறிப்பு:

உதாரணம் "is" என்று சிகப்பு நிறத்தில் வேறுப்படுத்தி காட்டியிருப்பதை அவதானித்து, மற்றைய வாக்கியங்களையும் சிகப்பு நிறத்தில் கோடிட்டு காட்டியிருக்கும் இடங்களை நிரப்பி எழுதி பயிற்சி செய்யுங்கள்.

She is a nurse.
She _____ a nurse.
She _______ a nurse

கவனிக்கவும்:

Sarmilan is a Manager.
சர்மிலன் ஒரு நிர்வாகி.

இவ்வாக்கியத்தின் தமிழ்ப்பெயர்ப்பை சற்று கவனியுங்கள். இதில் "சர்மிலன் ஒரு நிர்வாகி." என்றே தமிழ் வழக்கின் படி நிகழ்கால வாக்கியமாக பயன்படுத்துக்கின்றோம். ஆனால் அவ்வாக்கியத்தை சற்று உன்னிப்பாக அவதானித்தீர்களானால், அதன் முழு வாக்கியம் "சர்மிலன் ஒரு நிர்வாகியாக இருக்கிறார்." என்று அமையும். அதற்கமைவாகவே "அவர் ஒரு நிர்வாகியாக இருந்தார், அவர் ஒரு நிர்வாகியாக இருக்கமுடியும், அவர் ஒரு நிர்வாகியாக இருப்பார்" எனும் வாக்கியங்களும் அமைகின்றன என்பதை எளிதாக உணர்ந்துக்கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக:

Sarmilan is a Manager.
சர்மிலன் ஒரு நிர்வாகி. (சாதாரணமாக தமிழில் எழுதும் வழக்கு)
சர்மிலன் ஒரு நிர்வாகியாக இருக்கிறார். (முழுமையான வாக்கிய அமைப்பு)

Sarmilan was a Manager.
சர்மிலன் ஒரு நிர்வாகியாக இருந்தார்.

Sarmilan will be a Manager.
சர்மிலன் ஒரு நிர்வாகியாக இருப்பார்.

சரி பயிற்சிகளை தொடருங்கள். இது மிகவும் இலகுவான ஓர் பயிற்சி முறையாகும்.

Download As PDF

Post a Comment

Previous Post Next Post