பரவலாக எங்கும் வேகமான இணைய இணைப்புகள் இருப்பதால் மென்பொருள்களை CD/DVD மூலம் வாங்குவதை தவிர்த்து இணையத்தில் டவுன்லோட் மூலம் வாங்கி கொள்ளுகிறார்கள். பெரும்பாலும் அவை ISO கோப்பு வடிவில் வருகின்றன. இது போன்று மைக்ரோசாப்ட்டின் புதிய இயங்குதளமான விண்டோஸ் 7 இணையத்தில் தரவிறக்கமாக விற்பனைக்கும் கிடைக்கிறது.
நண்பர் தமிழ்நெஞ்சம் விண்டோஸ் 7 க்கான நேரடி தரவிறக்க சுட்டிகளை தந்து ஒரு இடுகை இட்டு இருந்தார். பொதுவாக அவற்றை தரவிறக்கி DVD யில் ஏற்றி விண்டோஸ் 7 நிறுவ வேண்டி இருக்கும். விண்டோஸ் 7 Home Basic, Home Premium, Professional, Ultimate என்று பல்வேறு பதிப்புகளில் வருவதால் அதை சோதித்து பார்ப்பவர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு DVD வீணாகும்.
இப்போதெல்லாம் பல நெட்புக் கணினிகள் DVD டிரைவுகள் இல்லாமல் வருகின்றன. அவற்றில் விண்டோஸ் 7 நிறுவ எக்ஸ்டெர்னல் DVD டிரைவ் தேவைப்படும்.
இது போன்ற தருணங்களில் மாற்று வழி USB மூலம் விண்டோஸ் 7 நிறுவுவது. நேரடியாக ISO கோப்பினை USB யில் காப்பி செய்து, உபயோகிக்க முடியாது. USB யை bootable ஆக மாற்ற வேண்டும். இதற்கென எளிதான மென்பொருளை மைக்ரோசாப்ட் அளித்துள்ளது.
Windows 7 USB/DVD Download Tool. அதை இங்கு கிளிக் செய்து தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். இதனை திறக்கும் போது வரும் முதல் விண்டோவில் Browse கிளிக் செய்து நீங்கள் தரவிறக்கி வைத்துள்ள விண்டோஸ் 7 ISO கோப்பினை கொடுங்கள். 'Next' கிளிக் செய்யுங்கள்.
USB யை டிரைவில் பொருத்தி விட்டு, அடுத்த விண்டோவில் 'USB Device' கிளிக் செய்து கொள்ளுங்கள். குறைந்து பட்சம் 4GB அளவுள்ள USB டிரைவ் உபயோகப்படுத்துங்கள்.
அடுத்த விண்டோவில் USB டிரைவை தேர்ந்தெடுத்து கொள்ளவும். 'Begin Copying' கிளிக் செய்யவும்.
சில நிமிடங்களில் காப்பி செய்து முடித்து விடும். இப்போது உங்கள் விண்டோஸ் 7 இன்ஸ்டாலேஷன் USB தயார்.
கணினியை மீள்துவக்குங்கள் (Reboot). துவங்கும் போது ஆரம்பத்தில் F2 கீ அழுத்தி BIOS Setup க்குள் நுழைந்து கொள்ளுங்கள். அங்கே First Boot Drive என்பதில் USB யை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
F10 ஐ அளித்தி செட்டிங்க்ஸ் சேமித்து கொண்டு மீண்டும் கணினியை துவக்குங்கள். இப்போது உங்கள் கணினி USB மூலம் பூட் ஆகி விண்டோஸ் 7 நிறுவுதல் துவங்கும்.