
உங்களுக்கு அதிகம் அறிமுகம் / பழக்கம் இல்லாத நபர் ஒருவர் உங்களுக்கு தகவல் அனுப்ப வேண்டும் என்பதற்காக உங்கள் ஈமெயில் முகவரியை கேட்கிறார். அவருக்கு உங்கள் ஈமெயில் முகவரியை அளிக்க உங்களுக்கு தயக்கம். ஒரு முறை கொடுத்தால் அந்த நபர் தொடர்ந்து இம்சை தரக்கூடிய மெயில்களை அனுப்பி தொந்தரவு செய்வாரோ என்று தயங்குகிறீர்கள்.
சிலரிடம் ஈமெயில் முகவரியை கொடுத்து விட்டு அவரிடமிருந்து வந்து குவிந்த ஆபாச மெயில்களால் ஈமெயில் முகவரியை மாற்றியவர்களும் உண்டு.
சில தளங்கள் நீங்கள் ஈமெயில் முகவரி அளித்தால் தான் டவுன்லோட் செய்ய முடியும் / வீடியோ பார்க்க முடியும் என்ற கட்டுபாடுகளை வைத்து இருப்பார்கள்.
பெரும்பாலான தளங்களில் உள்ள சேவைகளை நீங்கள் உபயோகிக்க விரும்பும் போது உங்கள் ஈமெயில் முகவரியுடன் பதிவு செய்வதை கட்டாயமாக்கி இருப்பார்கள். பதிவு செய்யாமல் அவற்றின் சேவைகளை நாம் உபயோகிக்க முடியாது. அவ்வாறு பதிவு செய்யும் போது சில விஷம தளங்கள் நமது ஈமெயில்

தனிப்பட்ட உபயோகத்திற்கு ஒரு மெயில் முகவரியும், இது போன்ற பாதுகாப்பற்ற பிற உபயோகங்களுக்கு வேறு ஈமெயில் முகவரிகள் என்று பல ஈமெயில் முகவரிகளும் சிலர் உபயோகிப்பதுண்டு.
இது போன்ற தருணங்களில் நமது உண்மையான ஈமெயில் முகவரியை காப்பாற்றி, ஒரு தற்காலிக ஈமெயில் முகவரியை நம்பகம் இல்லாத இடங்களில் வழங்க ஒரு தளம் வழி செய்கிறது.
Spambox.us . இங்கு நீங்கள் உங்களுக்கு என தற்காலிக ஈமெயில் முகவரியை உருவாக்கி கொள்ளலாம். Spambox.us தளத்திற்கு நீங்கள் சென்று வலது புறம் இருக்கும் "Create Your Spambox" பகுதியில் உங்கள் உண்மையான ஈமெயில் முகவரியை அளிக்கவும். அதன் கீழே நீங்கள் வேண்டுகிற புதிய தற்காலிக ஈமெயில் முகவரியின் ஆயுட்காலம் எவ்வளவு கால அளவில் இருக்க வேண்டும் என்பதரையும் தேர்வு செய்து கொள்ளுங்கள். "Generate Spambox" கொடுத்தால் உங்கள் தற்காலிக ஈமெயில் முகவரி கிடைத்து விடும்.


இதன் மூலம் தொடர்ச்சியாக வரும் கசடு (Spam) ஈமெயில்களிடம் இருந்து தப்பிக்கலாம். உங்கள் உண்மையான ஈமெயில் முகவரியையும் தேவையில்லாத இடங்களில் கொடுப்பதை தவிர்க்கலாம்.