பதிவுகளை வாசித்து கொண்டிருந்த போது பிளாக் எழுதுபவர்களுக்கு என்று பதிவர் சுமஜ்லாவின் பதிவு கண்ணில் பட்டது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் இடுகைகள் தோன்றுவதில் சிக்கல் இருப்பதாக தெரிவித்து இருந்தார். நான் பெரும்பாலும் பயர்பாக்ஸ் உபயோகிப்பது வழக்கம். இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் எனது இந்த பிளாக் எப்படி தெரிகிறது என திறந்து பார்த்தேன். பிளக்கின் முகப்பு பக்கம் தெரிவதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இடுகை பக்கங்களை தனியே திறந்து பார்க்கும் போது பக்கத்தில் தவறு இருப்பதாக அதே பிழை செய்தி வந்தது. அடுத்து "Page not found" என்று இடுகை பக்கம் மூடப்பட்டு விடுகிறது.
எதனால் இந்த பிழை வருகிறது என்று கூகிள் ஆண்டவரை கேட்டேன். அவர் "கவலை படாதே! பக்தா!! இது உனக்கு மட்டுமல்ல! பெரும்பாலான மக்களுக்கு நேர்ந்துள்ளது!" என்று இந்த பிளாக்கர் பக்கத்தை சென்று பார்க்க சொன்னார்.
பிளாக்கர் நிர்வாகம் இந்த பிழை வருவதை இன்னும் தீர்க்காத பிரச்சினையாக ஒப்பு கொண்டுள்ளது. பிளாக்கில் "Followers" gadget நிறுவி இருப்பதால் தான் இந்த பிரச்சினை வருகிறது என்று தெரிவித்து உள்ளார்கள். இத்தனை சரி செய்ய பிளாக்கரின் Dashboard சென்று Layout --> Page Elements செல்லவும். "Follower" gadget ஐ நீக்கி விடவும். அல்லது உங்கள் சைடு பாரில் இறுதிக்கு கொண்டு சென்று நிறுவி விடவும் (இப்படித்தான் இந்த பிளாக்கில் செய்து உள்ளேன்) .
இப்போது பிரச்சினை தீர்ந்து விட்டது. பிளாக்கர் நிரந்தர தீர்வு தரும் வரை இதனை கடை பிடிப்போம்.
எனவே பிளாக்கில் "Follower" Gadget நிறுவி உள்ளவர்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் உங்கள் இடுகை பக்கங்கள் சரியாக தெரிகிறதா? என்று சோதிக்கவும். பிழை வந்தால் சரி செய்யவும். இல்லையெனில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மூலம் உங்கள் இடுகையை பார்வையிடும் பார்வையாளரை நீங்கள் இழக்க நேரிடும். இன்னும் பெரும்பாலான இணைய பார்வையாளர்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உபயோகித்து வருகிறார்கள் என்பது குறிப்பிட தக்கது.
குறிப்பு : நான் சோதித்து பார்த்தது Internet Explorer 8.0 . இந்த பிழையை அறியச்செய்த பதிவர் சுமஜ்லாவிற்கு மிக்க நன்றி.