HD டிவி , HD வீடியோ போன்ற வார்த்தைகளை நீங்கள் கேள்விப்பட்டு இருக்க கூடும். HD (High Definition) என்பது வழக்கமாக உள்ள வீடியோ resoultion களில் இருந்து மாறுபட்டு அதிக resoultion களில் வரும் வீடியோக்கள் ஆகும். இவை மிகவும் துல்லியமாக இருக்கும். HD வீடியோக்கள் பெரும்பாலும் 1280×720 pixels (720p) அல்லது 1920×1080 pixels (1080p) resolution களில் வருகின்றன.
யூடியுப்பில் HD வீடியோக்களை தரவேற்றும் வசதி இருந்தாலும் 1080p உயர்தர HD வீடியோக்களை தரவேற்ற முடியாது. இனி அதி துல்லிய 1080p HD வீடியோக்களை தரவேற்றி கொள்ள முடியும். இன்று முதல் இந்த வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. உங்களிடம் HD கேமரா இருந்தால் வீடியோக்கள் எடுத்து யூடுபில் தரவேற்றுங்கள். கேமரா இல்லாதவர்கள் உயர்தர வீடியோக்களை பார்க்க தயாராகுங்கள். இனி 1080p வீடியோக்கள் யூடுபில் அதிகம் தென்பட ஆரம்பிக்கும்.
உதாரணத்திற்கு இந்த வீடியோவை http://www.youtube.com/watch?v=5f-MYl-HzNw&fmt=37 பாருங்கள். அதன் தரத்தை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். குறைந்தபட்சம் 2mbps வேகம் உள்ள இணைய இணைப்பில்தான் buffer ஆகாமல் தடை இன்றி பார்க்க முடியும்.