கோப்புக்களின் வகைகள்

txt: நோட்பேடில் (note pad) நாம் டைப் செய்து சேமிக்கும் ஃபைல்கள் டெக்ஸ்ட் ஃபார்மெட்டுகளாக சேமிக்கப்படும். அனைத்து விண்டோஸ் இயக்கத்தளங்களிலும் இந்த ஃபைல்களை திறந்து பயன்படுத்திக் கொள்ளலாம். 

doc : இவ்வகையான ஃபைல் ஃபார்மெட்டுகள் வேர்டுபேடு, எம்எஸ்வேர்டு போன்ற சாஃப்ட்வேரில் திறந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதை டாக்குமென்ட் (document) பார்மெட் என்று அழைக்கிறோம். 

html: இணையப் பக்கங்களை அழகுற வடிவமைக்க இந்த வகையான ஃபைல் ஃபார்மெட் பயன்படுகிறது. நோட்பேடில் இதற்குரிய ப்ரோகிராமை டைப் செய்து சேமிக்கும் போது ஃபைலின் பெயர் மற்றும் .html என்று சேமிக்க வேண்டும். 


avi: இது வீடியோ ஃபைலை குறிக்கிறது. இவ்வகையான ஃபைல் ஃபார்மெட்டுகளை பயன்படுத்த எவ்வகையான சாஃப்ட்வேரையும் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை. விண்டோஸில் உள்ள மீடியா ப்ளேயர் வழியாகவே இதை இயக்கிக் கொள்ளலாம். 

mpeg: இது சுருக்கப்பட்ட மூவி ஃபைலாகும். ஏவிஐ ஃபைலை விட இதன் கொள்ளளவு குறைவாக இருக்கும். இந்த ஃபைல் ஃபார்மெட்டை எந்தவொரு சாஃப்ட்வேரிலிருந்தும் சேமித்து பெற முடியாது. 

psd: போட்டோஷாப் ஃபைல் ஃபார்மெட்டுகளே பிஎஸ்டி ஃபைல் என்றழைக்கப்படுகின்றன. இதற்கு போட்டோஷாப் சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இல்லையெனில் இந்த ஃபைலை திறக்க முடியாது. 

gif: பெரும்பாலும் இணையதளப் பணிகளில் இந்த ஃபார்மெட் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அனிமேஷன் மற்றும் ஃபோட்டோ ஃபார்மெட்டாக இவை இருக்கும். 

jpeg: இணையதளங்களில் பயன்படுத்தப்படும் படங்கள் ஜேபிஜே ஃபார்மெட் படங்களே. 

cdr: துல்லியமான அழகிய ஓவியங்கள் வரைந்து அதற்கு வண்ணங்களை கொடுத்து சேமிக்கப்படும் ஃபைல்கள் ஸ்ரீக்ழ் என்றழைக்கப்படுகிறது. இதன் விரிவாக்கம் coraldraw. 

pmd: பத்திரிகை பணிகளையும், விசிடிங் கார்டு போன்றவைகளை செய்ய பேஜ்மேக்கர் பயன்படுகிறது. இந்த சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்தால் தான் இந்த ஃபைலை பயன்படுத்த முடியும். 

tiff: உயரிய தரத்திலான ஃபோட்டோக்களை கொண்டு பிரிண்ட் எடுப்பதற்கு இந்த ஃபைல் ஃபார்மெட் பயன்படுகிறது. கோரல்ட்ரா மற்றும் ஃபோட்டோஷாப் சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்திருந்தால் இதை பயன்படுத்த முடியும். 

bmp: விண்டோஸ் சார்ந்த அனைத்து இயக்கத்தளங்களிலும் இந்த ஃபார்மெட் உறுதுணை செய்யும். மேக்கின்டோஷ் போன்ற இயக்கத்தளங்களில் இந்த ஃபைல் ஃபார்மெட் உறுதுணை செய்யாது.

Post a Comment

Previous Post Next Post