2000 வருடங்கள் பழமைவாய்ந்த மாயா ராணியின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு (பட இணைப்பு)


கவுதமாலாவின் புராதன நகும் இடிபாடுகளிலுள்ள கல்லறை ஒன்றிலிருந்து  2000 வருடங்கள் பழமைவாய்ந்த மாயா இன ராணியின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவருடைய தலை அதிசயிக்கதக்கவகையில்  இரண்டு கிண்ணங்களுக்கிடையில் வைக்கப்பட்டிருந்தது. இதனுடன் விலைமதிக்க முடியாத வாள்கள், படுக்கைகள், சம்பிரதாயபூர்வமான கத்திகளும் கிடைத்துள்ளன.
மாயா நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது அரச குடும்பத்தவர்களின் கல்லறை  இது என்பது குறிப்பிடத்தக்கது.
போலாந்தின்  jagiellonian பல்கலைக்கழகத்தின் புதைபொருள் ஆராய்ச்சி நிலையம் நகும் கலாச்சார முக்கோண வலையத்தின் சுற்றுச்சூழல் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.
இதன்போது மேலும் ஒரு கல்லறையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடர்ந்த காடாக காட்சியளிக்கும் இப்பிரதேசத்தில் 2006 ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சிகள் தொடங்கப்பட்டன.
இங்கு மேலும் பல கல்லறைகள் கண்டுபிடிக்கப்படலாம் என  ஆராய்ச்சியாளர்கள்  தெரிவிக்கின்றனர். ஒரேவகையான கலாச்சார பாரம்பரியங்களை பகிர்ந்துகொள்ளும் பல மாநிலங்களில்   மாயன் நாகரீகம் எனும் பொதுவான  பெயர் வழங்கப்பட்டது.
அந்த நாகரீகத்தைச் சேர்ந்த மக்கள் மத்திய அமெரிக்கா மற்றும் தென்பகுதிகளான மெக்சிகோ, பெலிஸ், கௌதமாலா, எல் சல்வடோர் ஹோண்டுராஸ் ஆகியவற்றையும் ஆட்சி செய்தனர்.
கி.மு.500 முதல் கி.பி.900 வரையான காலப்பகுதியில் இவர்கள் வாழ்ந்ததாக அறிவிக்கப்படுகின்றது. 30 வகையான மொழிகளையும் இவர்கள் பேசியுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post