நாம் தகவல்களை சேமிக்க கணணியில் பல்வேறு வகைப்பட்ட போர்மட்டுடைய கோப்புகளை பயன்படுத்துகின்றோம்.
.txt: இது மிக எளிமையான வேர்ட் ப்ராசசிங் டெக்ஸ்ட் கோப்பைக் குறிக்கிறது. இந்த வகை கோப்பை போர்மட்டிங் விஷயங்கள் இருக்காது, எனவே Notepad உட்பட எந்த வகையான வேர்ட் ப்ராசசிங் சாப்ட்வேர் தொகுப்பிலும் இதனைத் திறக்கலாம்.
.rtf: ரிச் டெக்ஸ்ட் போர்மட் என அழைக்கப்படும் இந்த வகை கோப்புகளில் ஓரளவிற்கு டெக்ஸ்ட் போர்மட்டிங் இருக்கும். போர்மட்டைக் காட்டுகிற எந்தவித வேர்ட் ப்ராசசிங் தொகுப்பும் இதனைத் திறந்து காட்டும்.
.doc: மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்படும் கோப்புகள் அனைத்தும் இந்த துணைப் பெயருடன் கிடைக்கும். எனவே இந்த துணைப் பெயர் இருந்தால் வேர்ட் தொகுப்பைத் திறந்து கோப்பைத் திறக்கலாம்.
.xls: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள எக்ஸெல் புரோகிராமில் உருவாகும் கோப்புகள் இந்த துணைப் பெயருடன் அமைக்கப்படும். எனவே எக்ஸெல் புரோகிராம் அல்லது வேறு ஏதேனும் ஸ்ப்ரெட் ஷிட் புரோகிராம் ஒன்றில்தான் இதனைத் திறக்க முடியும்.
.ppt: விண்டோஸின் பிரிமியர் பிரசன்டேஷன் பேக்கேஜ் ஆன பவர் பாய்ண்ட் தொகுப்பில் உருவாகும் கோப்புகளுக்கு இந்த துணைப் பெயர் கிடைக்கும்.
.pdf: இந்த வகை கோப்பை அடோப் அக்ரோபட் ரீடர் அல்லது அதைப் போல வந்துள்ள பல புதிய புரோகிராம்களைக் (PDF Viewer) கொண்டு திறக்கலாம். Portable Document File என்று இதனை முழுமையாக அழைக்கிறார்கள். டெஸ்க் டாப் பப்ளிஷிங் மூலம் உருவாக்கப்பட்ட பைல்களை விநியோகம் செய்திட இந்த பைல் முறையைப் பலர் கையாளுகின்றனர்.
கோப்பு உருவான பாண்ட் இல்லாமல் டெக்ஸ்ட் கோப்பை அப்படியே படம் போல் கோப்பாக இது காட்டும். தற்போது இந்த வகை கோப்புகளை மீண்டும் டெக்ஸ்ட்டாக மாற்றுவதற்கும் புரோகிராம்கள் கிடைக்கின்றன. அடோப் அக்ரோபர் ரீடர் உட்பட இந்த வகை கோப்புகளைத் திறந்து படிக்கக் கூடிய புரோகிராம்கள் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
.htm / html: ஒரு கோப்பு இவற்றில் ஏதாவது ஒன்றினைத் துணைப் பெயராகக் கொண்டிருந்தால் இது இன்டர்நெட்டில் பயன்படுத்த அமைக்கப்பட்டது என அடையாளம் கண்டு கொள்ளலாம்.
எனவே இதனை ஒரு வெப் பிரவுசர் புரோகிராமில் திறக்கலாம். விண்டோஸ் இயக்கத்தில் இதனைத் திறக்க இருமுறை கிளிக் செய்தால் அது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பினைத் திறந்து இந்த கோப்பைக் காட்டும். அவ்வாறு காட்ட மறுத்தால் உங்கள் கணணியில் உள்ள வேறு வெப் பிரவுசர் மூலம் இதனைத் திறக்கலாம்.
.csv: ஒரு ஸ்ப்ரெட் ஷீட்டில் அமைக்கப்பட வேண்டிய தகவல்கள் காற்புள்ளிகள் என அழைக்கப்படும் கமாக்களால் பிரிக்கப்பட்டு கோப்பாக அமைக்கப்படுகையில் இந்த துணைப் பெயர் அந்த கோப்புக்கு கிடைக்கும். இதனை எக்ஸெல் புரோகிராமில் திறந்து பார்க்கலாம் அல்லது தகவல்களை சும்மா பார்த்தால் போதும் என எண்ணினால் எந்த வேர்ட் தொகுப்பு மூலமும் பார்க்கலாம்.
சுருக்கப்பட்ட கோப்புகள்: கீழே கோப்புகளை சுருக்கித் தருகையில் கிடைக்கும் கோப்பு வகைகளின் துணைப் பெயர்கள் தரப்பட்டுள்ளன.
இவ்வாறு கோப்புகளை சுருக்கித் தருவதனை File compresseion என அழைக்கின்றனர். கோப்புகளின் அளவைச் சுருக்கி இணையம் வழி பரிமாறிக் கொள்ளவும் எடுத்துச் செல்லவும் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
.zip: இந்த துணைப் பெயருடன் ஒரு கோப்பு உங்களுக்கு வந்தால் அது சுருக்கப்பட்ட கோப்பு என்று பொருள். இத்தகைய கோப்புகளை விரித்துக் காட்ட இணையத்தில் நிறைய புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றில் அதிகம் பயன்படுத்தப்படுவது விண்ஸிப் புரோகிராமாகும்.
.rar: இதுவும் சுருக்கப்பட்ட கோப்பின் ஒரு வகையாகும். இதனைத் திறக்க சில ஸ்பெஷல் புரோகிராம் தேவைப்படலாம். Win Rar என்ற புரோகிராம் இந்த பணியை மிக அழகாகச் செய்து முடித்திடும்.
.cab: உங்கள் கணணியில் விண்டோஸ் இயக்கத்தில் ஏதேனும் புரோகிராம் ஒன்றை, எடுத்துக்காட்டாக வேர்ட் புரோகிராம், இன்ஸ்டால் செய்தால் விண்டோஸ் அந்த புரோகிராமினைப் படித்துத் தெரிந்து கொண்டு அதனை கேபினட் கோப்பு ஒன்றில் பதிந்து வைக்கும். அந்த வகை கோப்பின் துணைப் பெயர் தான் இது. இந்த கோப்பை நாம் படித்து அறிய வேண்டியது இல்லை. எனவே இதனைத் திறக்காமல் இருப்பதே நல்லது.
....................................................................................................................................................................
அனைத்து வகையான கோப்புகளின் போர்மட்டுகளை மாற்றுவதற்கு
சில குறிப்பிட்ட நோக்கத்துக்காக பல வகையான கோப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் நாம் குறிப்பிட்ட வகையான கோப்பினை வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
நாம் எந்த வகையான கோப்பினையும் நாம் விரும்பும் வண்ணம் பயன்படுத்தலாம். அந்த அளவுக்கு பல வடிவங்களில் கோப்புகள் நிறைய உள்ளன.
நம் கோப்புகளை பிறருக்கு தரும்போது அதனை அவர்கள் விரும்பிய வகையில் விரும்பும் வடிவத்தில் கொடுக்கலாம். அதற்காக பல வகையான மென்பொருள்கள் இணையத்தில் இலவசமாகவும், கட்டண அடிப்படையிலும் இருக்கின்றது.
அதுமட்டுமல்ல ஓன்லைனில் கூட பல வடிவங்களை மாற்றும் மென்பொருள்கள் செயல்படுகின்றன. அதில் இந்த தளம் பல வசதிகளை தன்னில் கொண்டுள்ளது.
இந்த தளத்தில் நாம் படம், வீடியோ, ஓடியோ மற்றும் ஆவணங்களையும் பல வடிவங்களில் மாற்றலாம். இந்த வசதியை பயன்படுத்துவதும் மிகவும் எளிது.
குறிப்பிட்ட தளத்திற்கு செல்லுங்கள். பின்னர் அதில் உள்ள BROWSE என்ற பொத்தானை அழுத்துங்கள்.
அதில் உங்கள் கோப்பினை தேர்வு செய்யுங்கள். பின்னர் உங்களுக்கு தேவையான வடிவத்தை தேர்வு செய்யுங்கள்.
பின்னர் CONVERT NOW என்ற பொத்தானை அழுத்துங்கள். அவ்வளவு தான் உங்கள் கோப்பின் வடிவம் மாற்றப்படும். அதனை தரவிறக்கி கொள்ளுங்கள்.
அதுமட்டுமல்ல இந்த தளத்தில் நாம் நேரடியாக பதிவிறக்க முகவரியையும் கொடுத்து கோப்பின் வடிவத்தை மாற்றலாம். இந்த தளம் மூலம் ZIP, RAR ARCHIVE, PDF, XPS, PPT போன்ற பல வகையான கோப்புகளின் வடிவத்தையும் மாற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.