ஆங்கிலம் துணுக்குகள் 08

ஆங்கிலம் துணுக்குகள் 08 (Verb Forms)

இன்றைய ஆங்கிலம் துணுக்குகள் பகுதியில் ஒரு வினைச்சொல் ஆங்கில மொழியில் எத்தனை வடிவங்களாகப் பயன்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.

ஐந்து வடிவங்களாகப் பயன்படுகின்றன. அவைகளாவன:

1. Base Form
2. Gerund Form
3. Third Person Form
4. Past Form
5. Participle Form

எடுத்துக்காட்டு:

"do" எனும் ஒரு வினைச்சொல்லை எடுத்துக்கொண்டோமானால், அது do, doing, does, did, done என ஐந்து வினை வடிவங்களாகப் பயன்படுவதைப் பார்க்கலாம். இவ்வாறு ஆங்கில வினைச் சொற்கள் அனைத்தும் ஐந்து வினை வடிவங்களாக பயன்படுகின்றன.

மேலும் சில எடுத்துக்காட்டாக இந்த அட்டவணையைப் பாருங்கள்.
FormsVerbs
Base Formdogospeakplay
Gerund Formdoinggoingspeakingplaying
Third Person Formdoesgoesspeaksplays
Past Formdidwentspokeplayed
Participle Formdonegonespokenplayed

1. இதில் "Base Form" என்பது ஆதாரமான அடிப்படை வினைச்சொற்களாகும்.

2. "Gerund Form" என்பது base form சொற்களுடன் "ing" யும் இணைந்து பயன்படுபவைகள்.

3. "Third Person Form" என்பது சாதாரண நிகழ்கால வினைச்சொற்கள், மூன்றாம் நபர் ஒருமை பயன்பாடாகப் பயன்படுபவைகள். அதாவது "Base Form" உடன் "s, es" போன்ற எழுத்துக்கள் இணைந்து பயன்படும். இவற்றை அட்டவணை Third Person Singular (He, She, It: infinitive + e/es) பார்க்கலாம்.

4. "Past Form" இவை ஆங்கிலத்தின் இறந்தக்கால வடிவமாகும். இது "Regular Verbs" களின் போது "ed" எனும் எழுத்துக்கள் இணைந்து பயன்படும். அதேவேளை "Irregular Verbs" களின் போது ஒரு ஒழுங்கு முறையற்று காணப்படும். இவற்றை நீங்கள்அட்டவணை (Irregular verbs) இல் பார்க்கலாம்.

5. "Participle Form" இவைகளும் Past Form போன்றே "Regular Verbs" களின் போது "ed" எனும் எழுத்துக்கள் இணைந்து பயன்படும் என்றாலும், Irregular Verbs களின் போது வேறுப்பட்டு காணப்படும். இவற்றையும் நீங்கள் அட்டவணை (Irregular Verbs) இல் பார்த்து பயிற்சி செய்துக்கொள்ளலாம்.

இவ்வாறு ஆங்கிலத்தில் மொத்தம் ஐந்து வினைச்சொல் வடிவங்கள் உள்ளன.

Download As PDF

Post a Comment

Previous Post Next Post