ஆங்கிலம் துணுக்குகள் 06

ஆங்கிலம் துணுக்குகள் 6 (English Language: List of abbreviations)

இன்றைய ஆங்கிலம் துணுக்குகள் பகுதியில் ஆங்கில கற்கை நெறிகள் பற்றியும், அவற்றின் சுருக்கப் பயன்பாடுகள் (Abbreviations) பற்றியும் அறிந்துக் கொள்வோம்.

இவற்றை நாம் அறிந்துக்கொள்வதுடன், ஆங்கிலம் கற்க விரும்புவோர், தமக்கு பொருத்தமான ஆங்கில கற்கை நெறி எது என்பதை தெரிவு செய்துக்கொள்வதற்கும் உதவிட முடியும்.

AAAL - American Association for Applied Linguistics.

ACTFL - American Council on the Teaching of Foreign Languages.

AE - American English.

ARELS – Association of Recognized English Language Services.

BAAL - British Association of Applied Linguistics.

BASELS –British Association of State English Language teaching.

BC - British Council.

BEC - Business English Certificate.

BrE - British English.

BVT - Bilingual Vocational Training.

CAE - Certificate of Advanced English.

CALI - Computer-Assisted Language Instruction.

CALL - Computer-Assisted Language Learning.

CanE - Canadian English.

CAT - Computer Adaptive Testing.

CBT - Computer-Based Teaching.

CEELT - Cambridge Examination in English for Language Teachers. (That tests the English skills of non-native teachers of English.)

CEIBT - Certificate in English for International Business and Trade for advanced levels.

CILTR – Centre for Information in English on Language Teaching and Research.

CPE - Certificate of Proficiency in English (The fifth and the most advanced of Cambridge's series of exams. (Roughly comparable to a score of 600-650 on the TOEFL))

CELTA - Certificate in English language teaching to adults.

CTEFLA – Certificate in the teaching of English as a Foreign Language to Adults.

DELTA - Diploma in English Language Teaching to Adults.

EAP - English for Academic Purposes.

ECCE - Exam for the Certificate of Competency in English. (Michigan University) - lower level

ECPE - Exam for the Certificate of Proficiency in English. (Michigan University) - higher level

EFL - English as a Foreign Language.

EGP - English for General Purposes.

EIP - English as an International Language.

ELICOS - English Language Intensive Courses to Overseas Students. (Australia)

ELT - English Language Teaching.

ESL - English as a Second Language.

ESOL - English for Speakers of Other Languages.

ESP - English for Special Purposes (Business English, English for tourism, etc.)

ETS - Educational Testing Service.

FCE - First Certificate in English.

GMAT - Graduate Management Admission Test.

GPA - Grade Point Average.

GRE - Graduate Record Examination.

IATEFL - International Association of Teachers of English as a Foreign Language.

IPA - International Phonetic Association.

IELTS – International English Language Testing System.

KET - Key English Test. (The most elementary of Cambridge's series of exams.)

LEP - Limited English Proficient.

NATECLA - National Association for Teaching English and other Community Languages to Adults. (UK)

NATESOL - National Association of Teachers of English for Speakers of Other Languages.

NCTE - National Council of Teachers of English.

NLP - Neuro Linguistic Programming.

NNEST - Non-Native English Speaking Teacher.

MTELP - Michigan Test of English Language Proficiency.

OE - Old English.

OED - Oxford English Dictionary.

PET - Preliminary English Test. (The second of Cambridge's series of exams.)

RP - Received Pronunciation - ('standard' British pronunciation.)

RSA/Cambridge C-TEFLA - Certificate of Teaching English as a Foreign Language to Adults. (A professional qualification for prospective EFL teachers.)

RSA/Cambridge D-TEFLA - Diploma of Teaching English as a Foreign Language.

SAE - Standard American English.

SAT - Scholastic Assessment (Aptitude) Test. (Pre-university entrance exam in the USA.)

TEFL - Teaching English as a Foreign Language.

TEFLA - Teaching English as a Foreign Language to Adults.

TEIL - Teaching English as an International Language.

TESL - Teaching English as a Second Language.

TESOL - Teaching English to Speakers of Other Languages.

TOEFL - Test of English as a Foreign Language. (The most common English language exam for North American universities and colleges, also accepted by some British universities and employers as proof of English proficiency.)

TOEIC - Test of English for International Communication. (The TOEIC (pronounced "toe-ick")

VE - Vocational English.

VESL - Vocational English as a Second Language.

YLE - Young Learners English Tests. (Cambridge Examinations for young learners.)

மேலே வழங்கப்பட்டிருக்கும் "ஆங்கில மொழி கற்கை நெறிகள்" இன்று பன்னாட்டளவில் பிரசித்திப்பெற்று பலரதும் தெரிவுகளாக இருப்பவைகளாகும்.

ஆங்கில மொழியின் வளர்ச்சியும் அவசியமும்

இன்று ஆங்கிலம் ஒரு சர்வதேச மொழியாக வளர்ந்து உயர்ந்து நிற்கிறது. பரந்து விரிந்த உலகம் இன்று ஒடுங்கிச் சுருங்கி காண்பதற்கு ஆங்கில மொழியின் வளர்ச்சியும் அதன் பயன்பாட்டின் விரிவுமே காரணம். இன்று உலகில் எம்மொழியைத் தவிர்த்தாலும், ஆங்கில மொழியை தவிர்க்க முடியாதக் கட்டாயத்திற்குள்ளேயே நாம் அனைவரும் உள்ளோம். அறிவியல் வளர்ச்சிக்கும், தொழிநுட்பத் துறைகளுக்கும், உயர் கல்வி கற்கைகளுக்கும் ஆங்கிலம் அத்தியாவசியமானது என்பதில் யாரும் இரண்டு கருத்துக்களை கொண்டிருக்க முடியாது. ஆங்கிலத்திற்கு முன்னுரிமை கொடுக்காத ஜப்பான், சீனா, மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் கூட தற்போது ஆங்கில மொழி கல்வியில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஆங்கிலம் கற்பதானால் கிடைக்கும் பெறுபேறுகள், ஆங்கிலம் கற்காதவரை விட அதிகம் என்பதை எல்லோரும் அறிவோம்.

ஆங்கிலக் கற்கை நெறியில் தேர்வு ஏன் அவசியம்?

சாதாரணமாக ஆங்கிலம் கற்க விரும்பும் பலர்; ஆங்கில பேச்சுப் பயிற்சியை (Spoken English) அல்லது அதனை மேம்படுத்திக் கொள்ளும் வகையிலேயே ஆங்கில கல்வியைக் கற்க விளைகின்றனர். ஆங்கில பேச்சுப் பயிற்சி அவசியம் என்கின்றப் போதிலும், நாம் நமது துறை சார்ந்து எவ்வாறான ஆங்கிலக் கல்வியைத் தொடர வேண்டும் என்பதில் பலரிடம் சரியான தெரிவுகள் இல்லை. பொருளீட்டலை முதன்மையாகக் கொண்டு, கவர்ச்சிகரமான அறிமுகங்களின் ஊடாக, ஆங்கிலம் கற்பித்துத் தருவதாக 30 நாள் ஆங்கிலம், 60 நாள் ஆங்கிலம், என விளம்பரங்கள் நிறையவே காணப்படுகின்றன. இவ்வாறான கற்கை நெறிகள் முழுமையான பலனைத் தரப்போவதில்லை.

உலகில் எந்த ஒரு மொழியிலும் பார்க்க அதிகமான பத்து இலட்சம் சொற்களைக் கொண்ட ஒரு மொழியாக ஆங்கிலம் வளர்ந்து நிற்கிறது. அதிலும் ஒரே சொல்லுக்கு பல வரைவிலக்கணங்களைக் கொண்ட சொற்கள் ஏராளம் உள்ளன. அதில் 464 வரைவிலக்கணங்களைக் கொண்ட ஒரு சொல்லும் உள்ளது. அத்துடன் ஆங்கிலம் ஒரு ஒலிப்பொழுக்கம் அற்ற மொழி. இவை இப்படி இருக்க; எவர் எப்படி 30, 60 நாட்களில் ஆங்கிலம் கற்றுத்தர முடியும்? ஆங்கில மொழியை தாய் மொழியாகக் கொண்டோர் என்றாலும் உயர் கல்விவரை ஆங்கிலம் அவர்களுக்கும் ஒரு பாடமாகவே இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே ஆங்கில மொழியில் ஆளுமை மிக்கவராகத் திகழ வேண்டும் என விரும்பும் ஒருவர் தொடர் முயற்சியுடன் கற்றல் மிக அவசியம். அத்துடன் ஆங்கில பயிற்சிகளை தொடரவிரும்புவோர், தனது துறைச் சார்ந்த ஆங்கில கற்கை நெறியைத் தெரிவு செய்தல் கூடியப் பயனைத் தரும். அதுவும் ஆங்கில இலக்கணம் சார்ந்தே கற்க வேண்டும் என்பது கருத்தில் கொள்ளவும்.

TOEFL, IELTS போன்ற ஆங்கில மொழி பரீட்சையில் சிறந்தப் புள்ளிகளைப் பெறுவோர், உலகில் பிரசித்திப்பெற்ற பல்கலைக் கழகங்களில் தமது உயர் கல்வியைத் தொடரவும், எளிதாக வெளிநாடுகளில் உயர் தொழில் வாய்ப்பு பெற்றிடவும் முடியும்.

குறிப்பு:
இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஆங்கிலக் கற்கை நெறிகள் தொடர்பான பெயர்களின் பட்டியல்; ஆங்கிலக் கல்வியை தொடரவிரும்புவோருக்கு, தனது கல்வி சார்ந்து, துறை சார்ந்து தொடர உதவும் எனும் நோக்கிலேயே இடப்பட்டுள்ளது. இக்கற்கை நெறிகள் தொடர்பான மேலதிக விளக்கங்கள் தேவை எனில் எமது மின்னஞ்சல் ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.

மேலும் 'Abbreviations' மற்றும் 'Acronyms' களையும் பார்க்கலாம்.உயர் கல்வி, ஆங்கில வழிக் கல்வி, English Higher Education

 Download As PDF

Post a Comment

Previous Post Next Post