யார் கண்ணுக்கும் தெரியாமல் ரகசியமாக சைட் அடிக்கும் தொழில் நுட்பம்

மற்றவர்களின் கண்களுக்கு தெரியாமல் , அவர்கள் முன்பே நடமாட முடிந்தால் , அவ்ர்களை கண்காணிக்க முடிந்தால் , வாழ்க்கை எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும் !!!! எதிரிகளை உளவு பார்க்கவும் முடியும்… நமக்கு பிடித்தவர்களை , அவர்களுக்கு தொல்லை கொடுக்காமல், அருகில் இருந்து ரசிக்கவும் முடியும்.. கதைகளில் மட்டுமே சாத்தியமாக இருந்த இந்த பண்பை அறிவியல் நடைமுறையில் சாத்தியமாக்க இருக்கிறது.. ஒரு குறிப்பிட்ட ஆடையை அணிந்து கொண்டால் , யார் கண்ணிலும் பட மாட்டீர்கள்.. கடன் கொடுத்தவர்கள் கண்ணில் பட மாட்டீர்கள் என்பது மட்டும் அனுகூலம் அல்ல.. நாம் காதலிக்கும் பெண்ணை அவள் வீட்ற்கு சென்று பேசி விட்டு , யார் கண்ணிலும் படமால் திரும்பி வந்து விடலாம் என்ற அனுகூலமும் இருக்கிறது.. மேலும் சில சீரியஸ் அனுகூலங்களும் இருக்கின்றன… இப்படிப்பட்ட ஆடைக்கு தேவையான துணிக்கான ஆதார பொருளை கண்டு பிடித்துள்ளதாக ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். அறிவியல்ரீதியாக இது எப்படி சாத்தியமாகும் ? இதை புரிந்து கொள்ள , ஒரு பொருளை நாம் பார்ப்பதற்கு பின் இருக்கும் அறிவியலை புரிந்து கொள்ள வேண்டும். ஒளி அதாவது வெளிச்சம் ஒரு பொருளின் மீது படும்போது என்ன நடக்கிறது என்பதை பொறுத்தே , தமன்னாவை சிவப்பாகவும் , கிளியை பச்சையாகவும் பார்க்கிறோம்.. ஏழு வண்ணங்கள் சேர்ந்ததுதான் எல்லா நிறமும் உண்டாகிறது.. 400 நானோ மீட்டர் முதல் 700 நானோ மீட்டர் வரை அலை நீளம் கொண்ட வண்ணங்களையே நம் கண்களால் பார்க்க முடியும்.. வயலட் நிறம் குறைவான அலை நீளம் கொண்டது… சிவப்பு அதிக அலை நீளம் கொண்டது… மற்ற நிறங்கள் இதற்கு இடப்ப்பட்டவை.. ஒரு பொருள் எல்லா நிறத்தையும் விழுங்கிவிட்டு, சிவப்பை மட்டும் பிரத்திபலித்தால் , அந்த பொருள் சிவப்பாக இருக்கிறது என்கிறோம்… அதாவது ஒளி ஒரு பொருளின் மீது பட்டு எப்படி பிரதிபலிக்கிறது என்பதே அந்த பொருளின் நிறம்.. சரி, ஒளி இப்படி ஒரு பொருளின் மீது பட்டு பிரத்திபலிக்காமல், அதை சுற்றி சென்று விட்டால் என்ன ஆகும் ? அதாவது தன் ஓடு பாதையில் இருக்கும் கல்லின் மீது மோதி திரும்பாமால்,. அந்த கல்லை சுற்றி ஓடும் நீர் போல.. நடைமுறையில் அப்படி ஒளி செல்லாது… கண்ணாடி போன்ற பொருட்களை ஒளி ஊடுருவி செல்லும்.. மற்ற எல்லா பொருட்களும் ஒளியை கவர்ந்து விடும்… கொஞ்சம் பிரதிபலிக்கும்…. ஒளியை விலக செல்லும் பொருட்கள்தான் இந்த ஆராய்ச்சியின் இலக்கு… இது போன்ற பொருட்களை முன்பே கூட சிலர் உருவாக்கி இருக்கின்றனர்,.,,, ஆனால் அந்த பொருட்கள் ஆராய்ச்சி கூடங்களில் மட்டுமே பயன்படும்… அவற்றை நம் விருப்பதிற்கேற்ப வளைக்கவோ, மாற்ற்வோ முடியாது… நெகிழ்வு தன்மை கொண்ட பொருளை இவர்கள் உருவாக்கி இருக்கின்றனர் என்பதால்தான் இந்த பதிவு,… Andrea di Falco of the University of St. Andrews ஆண்ட்ரியா டி ஃபால்கோ தலைமையில் செயிண்ட் ஆண்ட்ரிவ்ஸ் பல்கலையில் இந்த பொருளை உருவாக்கி இருக்கின்றனர்.. சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் பாலிமர் மற்றும் சிலிக்கானை பயன்படுத்தி இதை தயாரித்துள்ள்னர்.. இதை பயன்படுத்தி செய்யப்பட்ட காண்டாக்ட் லென்ஸ் எதிர்பார்த்த ரிசல்ட்டை தந்தது.. இந்த பொருளை பயன்படுத்தி செய்யப்பட்ட கண்ணாடியை அணிந்தால், நாம் கண்ணாடி அணிந்து இருப்பது வெளியே தெரியாது… நாம் ஆடை அணிவது மற்றவர்கள் கண்களுக்கு சிறப்பாக தெரிய வேண்டும் என்பதற்காகத்தான்.,.. ஆனால் மற்றவர் கண்களுக்கு தெரிய அவசியமில்லாத ஆடைகளும் உண்டு… இந்த பயன்பாட்டுக்கும் , இந்த தொழில் நுட்பம் பயன்படும்.. இந்த பொருளை பயன்படுத்தி நாம் முழுதுமே கூட யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைந்து விடலாம்… யார் கண்ணுக்கும் தெரியாமல் அழகிய பெண்களை சைட் அடிக்கலாம் என்பதும், அவர்கள் பின் சுற்றலாம் எனபதும் உண்மைதான்… ஆனால், நாம் இந்த அளவுக்கு கஷ்டப்படுகிறோம் என்பது அந்த பெண்ணுக்கு தெரியாவிட்டால் பயனில்லாமல் போய் விடும்.. தவிர, இந்த ஆராய்ச்சியின் நோக்கம் இதுவல்ல..

Post a Comment

Previous Post Next Post