விண்டோசுக்கு மாற்றாக ஒரு புதிய OS(இயங்குதளம்)

லினக்சின் அடிபடையில் நிறைய இயங்குதளங்கள் உள்ளன.அவற்றில் சில வணிக அடிப்படையிலும் சில இலவசமாகவும் வழங்கப்படுகின்றன . இதற்கு காரணம் இவற்றின் மூல வரைவு இலவசமாக கொடுக்கப்படுவதே.ஆனால் விண்டோஸ் இயங்கு தளத்தின் மூல வரைவு மைக்ரோசாப்ட் மட்டுமே அறிந்த ஒன்று .இதுவரை எந்த இயங்கு தளமும் மைக்ரோசாப்ட்டின் மூல வரைவைச் சார்ந்து எந்த இயங்குதளமும் வரவில்லை இதை நிறைவு செய்து உள்ளது ரியாக்ட் ஓஸ் . ஆம் ரியாக்ட் ஓஸ் மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் NT கட்டமைப்பில் அமைத்து இருக்கிறது.

ரியாக்ட் ஓஸ் முற்றிலும் விண்டோசை போன்றது . இந்த குழுவினர் இல்லா நிரலையும் சி மற்றும் சி++ மொழியில்தான் எழுதி இதனை வடிவமைத்து உள்ளனர்.

                                               



இதன் மூல வரைவை அணுகுவதற்கு எந்த தடையும் இல்லை. விண்டோஸில் இயங்க கூடிய இல்லா மென்பொருள்களும் இதில் எவ்வித சிக்கலும் இன்றி இயங்கும் வண்ணம் இதை தயாரித்து உள்ளனர் இந்த குழுவினர் .பயன்படுத்துவோருக்கு மிக எளிதான அச்சு அசலாக விண்டோஸின் முகப்பைக் கொண்டது இது. இதை தரவிறக்க நாம் இதன் தளத்திற்கு செல்லவேண்டும் .


                                     FREE DOWNLOAD REACT OPERATING SYSTEM

Post a Comment

Previous Post Next Post