ட்விட்டர் போஸ்ட்களை பேஸ்புக்கில் Auto Publish செய்ய புதிய வசதி


ட்விட்டரை பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை பேஸ்புக்கிற்கு அடுத்து அனைவராலும் உபயோகப்படுத்தப்படும் மிகப்பெரிய சமூக இணைய தளம். தற்பொழுது இந்த ட்விட்டர் தளத்தில் தற்பொழுது புதிய வசதியை அளித்துள்ளனர். மிகப்பெரிய சமூக இணைய தளமான பேஸ்புக்கில் உங்களின் ட்விட்டர் போஸ்ட்களை Auto Publish செய்து விடலாம். நீங்கள் ட்விட்டரில் பதிவிட்ட அடுத்த நிமிடமே பேஸ்புக்கிலும் உங்களுடைய போஸ்ட் தானாக பப்ளிஷ் ஆகிவிடும். இதனால் இரண்டு தளங்களில் தனித்தனியாக தகவல்களை அப்டேட் செய்ய வேண்டியதில்லை. இந்த புதிய பயனுள்ள வசதியை உங்கள் கணக்கிலும் கொண்டு வர கீழே உள்ள வழிமுறையை கையாளுங்கள்.

  • முதலில் ட்விட்டர் தளத்திற்கு சென்று உங்கள் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • அடுத்து Settings செல்லுங்கள். இது உங்கள் பயனர் பெயர் இருக்கும் இடத்தில் இருக்கும்.
  • அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Profile Settings என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் கீழ் பகுதிக்கு சென்றால் Post your tweets to facebook என்ற ஒரு புதிய பட்டன் வதிருக்கும் அதன் மீது கிளிக் செய்யுங்கள். அது பேஸ்புக் பக்கத்திற்கு செல்லும் அல்லது உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வந்தால் திரும்பவும் அந்த பட்டன் மீது கிளிக் செய்யுங்கள்.

  • அடுத்து இன்னொரு விண்டோ ஓபன் அதில் பேஸ்புக் தளம் உங்களுடன் அனுமதி கேட்கும் அதில் Allow என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
  • அவ்வளவு தான் கடைசியாக உங்களுடைய செட்டிங்க்ஸ் மாற்றப்பட்டு ட்விட்டர் தளத்தில் கீழே இருப்பதை போல வரும் அதில் உள்ள Save பட்டனை அழுத்தி சேமித்து கொள்ளுங்கள்.
  • அவ்வளவு தான் இனி உங்களின் ட்விட்டர் அப்டேட்ஸ்கள் தானாகவே பேஸ்புக்கிலும் பகிரப்படும். 
Note: நேரடியாக குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டும் அனுப்படும் ட்விட்டர் தகவல்கள் பேஸ்புக்கில் அப்டேட் ஆகாது. 

Post a Comment

Previous Post Next Post