இப்போது எல்லோரும் புகைப்பட கலைஞர்களே. உங்கள் புகைப்படங்களை இணையத்தில் விற்பனை செய்ய தெரியுமா?


எல்லோரும் புகைப்பட கலைஞர்களே’,என்பது தான் ஃபோப் இணையதளத்தின் நம்பிக்கையாக இருக்கிறது.இந்த நம்பிக்கை இருப்பதால் தான் புகைப்பட சந்தையாக ஃபோப் அறிமுகமாகியிருக்கிறது.
ஃபோப்பில் யார் வேண்டுமானாலும் அவர்கள் எடுத்த புகைப்படங்களை விற்பனை செய்யலாம்.விற்பனை செய்வது என்றால் புகைப்படங்களை பதிவேற்றுவது,அவ்வளவு தான்.புகைப்பட பகிர்வு தளமான பிளிக்கரில் புகைப்படங்களை பதிவேற்றுவது போல இதிலும் புகைப்படங்களை சமர்பிக்கலாம்.
புகைப்படங்கள் தேவைப்படுபவர்கள் இந்த புகைப்படங்களை தேர்வு செய்து வாங்கி கொள்ளலாம். இதன் மூலம் புகைப்படங்களை சமர்பித்தவர்கள் டாலர்களை பெற்றுக்கொள்ளலாம்.வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் இந்த புகைப்படங்களை வாங்கி பயன்படுத்தி கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விளம்பரத்தில் பயன்படுத்தவோ அல்லது கட்டுரையில் பயன்படுத்தவோ நல்ல புகைப்படங்கள் தேவைப்பட்டால் நிறுவங்கள் தொழில் முறையிலான புகைப்பட கலைஞர்களையோ அல்லது புகைப்பட ஏஜென்சிகளையோ அணுகுவது வழக்கம்.இணையத்தின் மூலமே கூட புகைப்படம் வாங்கி கொள்ளலாம்.
ஆனால் இவை பெரும்பாலும் புகைப்பட கலைஞர்கள் எடுத்தவை.
இப்போது தான் பெரும்பாலானோர் கைகளில் ஸ்மார்ட் போன் இருக்கின்றன.ஸ்மார்ட் போன்கள் அழகான படம் எடுக்கும் திறன் பெற்றுள்ளன.இவற்றை கொண்டு பலரும் ஆர்வத்தோடு அழகிய புகைப்படங்களை எடுத்து தள்ளிக்கொண்டிருக்கின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் அமெச்சூர் புகைப்பட கலைஞர்கள் என்று அழைக்கப்பட்டாலும் பலநேரங்களில் இவர்களின் புகைப்படங்கள் அழகானதாக தரமானதாக அமைய வாய்ப்புண்டு.
இப்படி எடுக்கப்படும் புகைப்படங்களுக்கான சந்தையாக விளங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஃபோம் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்களில் எடுக்கும் படங்களை அந்த போன் வழியாகவே இந்த தளத்தில் பதிவேற்றலாம்.அதற்கான செயலியும் இருக்கிறது.
ஆக புகைப்படங்கள் தேவைப்படுபவர்கள் இந்த சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையான படங்கள் இருக்கிறதா என பார்த்து கொள்ளலாம்.புகைப்படங்களை தேவைகேற்ப தேடிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.
அதே போல ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் தாங்கள் எடுக்கும் புகைப்படங்களை இங்கே சமர்பிக்கலாம்.
அடிப்படையில் நல்ல கருத்தாக்கம் தான்.புகைப்படம் தேவைப்படுபவருக்கு உலக‌ம் முழுவதும் பரந்து விரிந்த புகைப்பட கலைஞர்களின் படையின் சேவை கிடைக்கும் வாய்ப்புள்ளது.அதே நேரத்தில் சாதாரண புகைப்பட கலைஞர்கள் தங்கள் ஆர்வத்தை வருவாயாக மாற்றி கொள்ளலாம்.
இப்போதைய நிலையில் இந்த தளம் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது.முகப்பு பக்கத்தில் அருமையான புகைப்படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.ஆனால் இவை பல்நோக்கு தேவையை பூர்த்தி செய்யக்கூடிய புகைப்பட சந்தையாக உருவாகுமா என்பது தெரியவில்லை.
இருப்பினும் பிரப‌ல விளம்பர நிறுவனமோ பத்திரிகையோ சாமான்யர் எடுத்த அழகான புகைப்படத்தை வாங்கி கொள்ள வாய்ப்பிருப்பது நல்ல வாய்ப்பு தான்.
நிற்க காமிரா போன்களின் வளர்ச்சியை கவனித்து வருபவர்களுக்கு இதே போலவே அறிமுகமான ஸ்கூப்ட் இணைய சேவையை நினைவிருக்கலாம்.
காமிரா போன்கள் பிரப்லமாக துவங்கிய காலத்தில் ஸ்கூப்ட் அறிமுகமானது.சாமான்யர்களின் புகைப்பட ஏஜென்சியாக ஸ்கூப்ட் செயல்பட்டது.அதாவது கேமிரா போன்களை வைத்திருப்பவர்கள் எடுக்கும் புகைப்படங்களை பத்திரிகை நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் ஏஜென்சியாக இரு செயல்பட்டது.
ஆரம்பத்தில் பரப்ரப்பாக பேசப்பட்ட இந்த தளம் பின்னர் மூடப்பட்டு விட்டது.தொழில் முறை புகைப்பட சேவையான கெட்டி இமெஜஸ் இதனை வாங்கியது தான் மூடப்பட்டதற்கான காரணமா என்று தெரியவில்லை.
ஆனால் ஸ்கூப்ட் தளத்திற்கு நேர்ந்த கதி ஃபோமிறகு நேரக்கூடாது என்பது தான் விருப்பம்.

Post a Comment

Previous Post Next Post