ஆங்கிலம் துணுக்குகள் 21

ஆங்கிலம் துணுக்குகள் 21 (Like vs Like)

இப்பாடமும் மின்னஞ்சல் வழியாக ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கான பதிலாகவே இடப்படுகின்றது.

ஆங்கிலத்தில் “like” எனும் சொல் தமிழில் இரண்டு பொருளைத் தருகின்றது. இது அநேகமாக பலரும் அறிந்த ஒன்று தான் என்றாலும், அறிய விரும்புவோரை மனதில் கொண்டே எழுதப்படுகின்றது.

Like விரும்பு
Like போன்ற / மாதிரி

Do you like Hong Kong?
நீ விரும்புகிறாயா ஹொங்கொங்கை?

Yes, I like Hong Kong. / Yes, I do.
ஆம், விரும்புகிறேன் ஹொங்கொங்கை.

இக்கேள்விகளுக்கான பதிலை சுருக்கமாக, "Yes, I do." எனக்கூறலாம்; ஆனால் "Yes, I like." என கூறுதல் சரியானதல்ல.

இப்போது கீழுள்ள எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்.

What’s the weather like(நிகழ்காலம்)
காலநிலை என்ன மாதிரி இருக்கின்றது?
It’s cold and cloudy.
அது குளிரும் மேகமூட்டமாகவும் இருக்கிறது.
It’s awful.
அது பயங்கரமானதாக இருக்கிறது.

What are the people like?
மக்கள் என்ன மாதிரியானவர்களாக இருக்கிறார்கள்?
They’re friendly.
அவர்கள் நற்புடன் (நண்பர்களாக) பழகுபவர்களாக இருக்கிறார்கள்.

What was the weather like(கடந்தக்காலம்)
காலநிலை என்ன மாதிரி இருந்தது?
It was freezing.
உறைந்து போவதைப் போன்று இருந்தது.

What were the people like?
மக்கள் என்ன மாதிரியானவர்களாக இருந்தார்கள்?
They were very nice.
அவர்கள் மிகவும் நல்லவர்களாக இருந்தார்கள்.

வேறுப்பாடு:
What + (be) + noun + like? என்ன மாதிரி என வினவ பயன்படும். அதாவது ஒரு வாக்கியத்தில் "be" வடிவத்துடன் பெயர்சொல் இடம்பெற்று, அதனைத்தொடர்ந்து "like" பயன்படுத்தப்படிருந்தால், அதன் பொருள் "மாதிரி" அல்லது "போன்று" என்பதாகப் பொருள் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக கீழுள்ள கேள்வியையும் பதிலையும் பாருங்கள்

What’s your flat like?
உனது மாடிவீடு என்ன மாதிரியானது?
It’s old and cheap.
அது பழையதும் மளிவானதும் ஆகும்.

இப்பொழுது இதன் கீழுள்ள கேள்வியைப் பாருங்கள். அதில் like "விரும்பு" எனும்வினைச்சொல்லாகப் பயன்படுகிறது. அதாவது "like" வினைச்சொல்லாக பயன்படும் இடங்களில் "விரும்பு" என பொருள் தருவதை எளிதாக உணரலாம்.

Do you like your flat?
நீ விரும்புகிறாயா உனது மாடிவீட்டை?
Yes, very much.
ஆம், மிகவும் (விரும்புகிறேன்)

குறிப்பு:
மின்னஞ்சல் வழியாக நிறைய கேள்விகள் வந்துள்ளன. நேரமின்மையால் எல்லா கேள்விகளுக்கும் உடனடியாக பதிலளிக்க முடியாதுள்ளமைக்கு வருந்துகிறோம். இருப்பினும் கேள்விகள் கேட்போர், கேட்கப்படும் கேள்விகளுக்கான விடை ஏற்கெனவே எமது பாடங்களில் இருக்கிறதா என்பதை உறுதிசெய்துக்கொண்டு கேளுங்கள். பாடங்கள் தொடர்பான கேள்விகளை குறிப்பிட்ட பாடத்திலேயே கேட்கலாம். பாடத்துடன் தொடர்பில்லாத கேள்விகளாயின் நேரம் கிடைக்கும் போதுதான் தனி பதிவாக வழங்க முடியும்.

Download As PDF

Post a Comment

Previous Post Next Post