கால ஓட்டமும் உலக ஓட்டமும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. காலவோட்டத்திற்கு ஏற்ப எமது வாழ்க்கை ஓட்டமும் ஓடிக்கொண்டே இருக்கின்றது. காலத்தை கணக்கிட்டு எமது கடமைகளை உரிய நேரத்தில் செய்ய கடிகாரம் எனும் நேரம் காண்பிப்பான் எப்போதும் எமக்கு தேவையாகவே இருக்கின்றது. நேரக் கணிப்பான் இல்லாவிட்டால் எதனையும் உரிய நேரத்தில் செய்ய தவறிவிடுவோம்.
நிழலை அளந்து நேரம் அறிந்து வந்த எம்மூதாதையர் காலப் பழக்கம், 19ம் நூற்றாண்டுகளில் கடிகாரம், கைக்கடிகாரம் போன்ற இலத்திரனியல் கண்டுப்பிடிப்புகளால் மெல்ல மறையத்தொடங்கியது. கைக்கடிகாரமும், கடிகாரமும் கூட 20ம் நூற்றாண்டுகளில் மறையத் தொடங்கி அழைப்பேசியிலேயே நேரம் பார்த்துக்கொள்ளும் வசதி வந்துவிட்டது. ஆம்! உலக அறிவியல் எத்தனை வேகமாக வளர்ந்து வருகிறது! அறிவியல் உலகம் எல்லாவற்றையுமே அவசரமாக்கி விட்டுள்ளது. பேருந்துக்கு அவசரம், தொடருந்துக்கு அவசரம், பணியகத்திற்கு செல்ல அவசரம், நேர்முகத் தேர்வுக்கு நேரம் பிந்திவிடுமோ என்றும் அவசரம், நேரம் சற்றுப் பிந்திவிட்டால் அதனாலான இழப்புகளும் அதிகம். எனவே எப்போதும் நேரம் பார்த்துப்பார்த்து பணி செய்யப் பழகிவிட்டோம். சில வேளை இந்த நேரம் காண்பிப்பான் நம்மிடம் இல்லை என்றால் என்ன செய்வது? யாராவது முன் பின் தெரியாத ஒருவரிடம் என்றாலும் நேரத்தை கேட்டறிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் எல்லோருக்குமே ஏற்படக்கூடியது தான்.
சரி! அப்படியானால் ஆங்கிலத்தில் எப்படி நேரம் கேட்டறிவது எனப் பார்ப்போமா?
What is the time now?
இப்பொழுது நேரம் என்ன?
Do you know what time it is?
உனக்குத் தெரியுமா எத்தனை மணி (என்று)?
Can you tell me the time?
உன்னால் எனக்கு நேரத்தைச் சொல்ல முடியுமா?
What time is it?
இப்போது என்ன நேரம்?
இப்படி எல்லாம் கேட்கலாம். ஆனால் ஆங்கிலத்தில் இப்படி கேட்டால் உங்களை நாகரிகம் அற்றவர் என்று கருதிவிடுவர். நாகரிகமற்ற விதமான பேச்சை விரும்பாத பலரும் உள்ளனர். எனவே ஆங்கிலத்தில் கேள்வி கேட்பதற்கும், பதிலளிப்பதற்கும் நாகரீகமானதும் தாழ்மையானதும் பேச்சு வழக்கு உள்ளது. அதனை "Polite Language" என்பர். நாமும் அதனைத்தான் கற்க வேண்டும். நாம் எமது பேச்சு வழக்கில் மற்றோர் எம்மை பண்பாளர்களாக மதிக்கும் நிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும். எனவே ஆங்கிலத்தில் தாழ்மையாகவும் மரியாதையாகவும் நேரம் கேட்டறியும் சொற்றொடர்கள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதை கீழே பார்ப்போம்.
Excuse me, what is the time now, please?
மன்னிக்கவும், தயவுசெய்து இப்பொழுது நேரம் என்ன?
ஆங்கிலத்தில் எப்பொழுதும் ஒருவரின் கவனத்தை ஈர்ப்பதற்கு "Excuse me" (மன்னிக்கவும்) எனும் சொல்லை முன்னொட்டாக சொல்லி பேச்சைத் தொடர்வது ஆங்கிலத்தில் மரியாதையான ஒரு அனுகுமுறையாகும். அத்துடன் "please" (தயவுசெய்து) எனும் சொல்லையும் இணைத்து உங்கள் வேண்டுக்கோளை விடுங்கள். அது உங்கள் பேச்சை கேட்பவர், நீங்கள் நாகரீகமாகப் பேசத்தெரிந்தவர், பண்பானவர் என்பதை எடுத்துக்காட்டும்.
மேலும் நேரத்தை கேட்டறிவதற்கான (Polite Language) சொற்றொடர்கள் சில:
Excuse me, what is the time please?Excuse me, what time is it?
Excuse me, have you got the time, please?
Sorry, do you have the time, please?
Can you tell me the time please?Can you please tell me what is the time?
Excuse me, could you tell me the time, please?
Excuse me, could you tell me what time it is?
Excuse me, do you have the time?
பதிலளித்தல்:
1:00: It's one o' clock.
இப்பொழுது ஒரு மணி.
3:00: It is three o'clock.
இப்பொழுது மூன்று மணி.
10:00: It is ten o'clock.
இப்பொழுது பத்து மணி.
It's ___ o' clock.(two/there/four/five/six/seven/eight/nine/ten/eleven/twelve) பொருத்தமான நேர இலக்கத்தைப் பொருத்திப் பதிலளியுங்கள். மேலும் பதிலளிக்கும் சில சொற்றொடர்களை கீழே பாருங்கள்.
8:00: It's eight o'clock.
இப்பொழுது எட்டு மணி.
8:05: It's five past eight.
இப்பொழுது 8 மணி 5 நிமிடம்.
8:10: It's ten past eight.
இப்பொழுது 8 மணி 10 நிமிடம்.
8:15: It's quarter past eight.
இப்பொழுது எட்டே கால்.
8:20: It's twenty past eight.
இப்பொழுது எட்டு இருபது.
8:30: It's half past eight.
இப்பொழுது எட்டரை.
8:40: It's twenty to nine.
இப்பொழுது ஒன்பதுக்கு இருபது. (இருபது நிமிடங்கள் உள்ளன)
8:45: It's quarter to nine.
இப்பொழுது ஒன்பதுக்கு கால். (கால் மணித்தியாளம் உள்ளது)
8:50: It's ten to nine.
இப்பொழுது ஒன்பதுக்கு 10. (நிமிடங்கள் உள்ளன)
8:55: It's five to nine.
இப்பொழுது ஒன்பதுக்கு ஐந்து. (நிமிடங்கள் உள்ளன)
9:00: It's nine o'clock.
இப்பொழுது ஒன்பது மணி.
8:35: It's twenty five to nine.
இப்பொழுது ஒன்பதுக்கு இருபத்தைந்து. (நிமிடங்கள் உள்ளன.
It's midnight.
இப்பொழுது நல்லிரவு. (இரவு 12.00 மணி)
It's noon.
இப்பொழுது நடுப்பகல் (பகல் 12.00 மணி)
It's lunch time.
இப்பொழுது பகல்சாப்பாட்டு நேரம்.
It's dinner time.
இப்பொழுது இரவு சாப்பாட்டு நேரம்.
It's time to go to bed. (Good night)
இப்பொழுது படுக்கைக்கு (நித்திரைக்கு) போகும் நேரம்.
ஆங்கிலத்தில் ஒருவரிடம் நேரத்தை கேட்டு, அதற்கு அவர் பதிலளித்தால், பதிலுக்கும் பதிலளிக்கும் வழக்கு ஆங்கிலத்தில் உள்ளது. சிலவேளை உங்களிடம் யாரேனும் ஒருவர் நேரம் கேட்டு, நீங்கள் நேரத்தைக் கூற, அவர் அதற்கு நன்றி கூறினால், நன்றிக்கும் மறுமொழிக் கூற மறவாதீர்கள். கீழுள்ள சொற்றொடர்களை கவனத்தில் கொள்ளவும்.
எடுத்துக்காட்டாக:
Excuse me. what is the time please?
It's five o' clock.
Thank you.You're welcome.
Excuse me. Have you got the time?
Yes, it's 5.00.
Thank you.You're welcome.
Excuse me. Can you tell me the time, please?
Yes, of course. It's seven o'clock.
Thanks.No problem.
கவனிக்கவும்:
நேரம் குறித்த மேலும் சில சொல்லாடல்கள். (இவற்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.)
To be on time
குறித்த நேரத்திற்கு. (வந்திடவும்/இருக்கவும்) நேரம் பிந்திவிட வேண்டாம் என்பதனை வலியுறுத்திக் கூறுவதற்கான சுருக்கச் சொற்றொடர்.
We'll leave at 10:10 am sharp.
நாங்கள் வெளிக்கிடுவோம் சரியாக (கூர்மையாக) காலை 10.10 க்கு.
மேலுள்ள வாக்கியத்தில் "sharp" எனும் சொல்லும் இணைந்து பயன்பட்டுள்ளதைக் கவனியுங்கள். "Sharp" என்றால் தமிழில் "கூர்மை" என்று பொருளாகும். அதாவது 10:10 am Sharp" என்பது, சரியாக (கூர்மையாக) பத்து மணி, பத்து நிமிடத்திற்கு என்பதாகும். அதன் உட்பொருள் 10.09 க்கும் அல்ல, 10.11 க்கும் அல்ல. மிகவும் கூர்மையாக 10.10 என்பதாகும். (கத்தியின் கூர்மைப் போன்று என்பதை நினைவில் கொள்க.)
குறிப்பு:
அன்பு உலகத்தமிழ் உறவுகளே! ஆங்கிலம் தொடர்பான எண்ணற்றக் கேள்விகள் தினமும் மின்னஞ்சலில் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. எல்லாவற்றுக்கும் உடனுக்குடன் பதிலளிப்பதற்கான நேரம் பிரச்சினையாக உள்ளது. அவற்றில் பல கேள்விகளுக்கு பதில் தளத்திலேயே உள்ளன. ஏனையவை எதிர்வரும் பாடங்களில் வழங்குவேன். கேள்வி கேட்போர் அக்கேள்வி தொடர்பான பாடங்களில் கீழ் மட்டுமே கேளுங்கள். பாடத்துடன் தொடர்பில்லாத கேள்விகளை மின்னஞ்சல் வழியில் கேளுங்கள். கேள்விகளை கேட்கும் முன் உங்கள் கேள்விக்கான பதில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள பாடங்களில் இருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அநேகமான கேள்விகளுக்கு பதிலும் தொடர்புடைய பாடங்களும் தளத்திலேயே உள்ளன. அவற்றை எளிதாக தேடி பெறுவதற்கு, ஒரு தேடு தளமும் உள்ளது. அதில் ஆங்கிலத்தில் அல்லது தமிழில் தட்டச்சிட்டு எளிதாக தேடிப்பெறும் வசதியுள்ளது. இருப்பினும் கேள்வி கேட்போரின் கேள்விகளில் அதிகமானவை "ஆங்கிலம் எவ்வாறு பேசுவது?" என்பது தொடர்பாகவே உள்ளன. அதனாலேயே இந்த "ஆங்கிலம் பேசுவது எப்படி?" எனும் புதியப் பகுதியை தொடங்கியுள்ளேன். இப்பகுதி எந்தளவுக்கு ஏற்புடையது என்பதைப் பொருத்து தொடருந்து வரும்.
நன்றி!

Tags
ENGLISH