கணணியில் உள்ள போலி கோப்புகளை கண்டறிந்து நீக்குவதற்கு

கணணியில் உள்ள தேவையற்ற போலி கோப்புகளை கண்டறிந்து அதனை நீக்கினால் கணணியின் வேகம் அதிகரிக்கும்.
போலி கோப்புகள் என்றால் என்ன, ஒரே மாதிரியான கோப்புக்களை மட்டுமே இதுபோல குறிப்பிடுவோம். நாம் சில நேரங்களில் தவறுதலாக ஒரே மாதிரியான கோப்புக்களை மீண்டும், மீண்டும் கொப்பி செய்து நம் கணணியில் வைத்திருப்போம்.
இவ்வாறு இருக்கும் கோப்புகளால் கணணியுடைய வேகம் குறையும். தேவையில்லாத கோப்புகளை அழிப்பதன் மூலமாகவும் கணணியுடைய வேகத்தை கூட்ட முடியும்.
இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து கொள்ளவும்.
இதில் எந்தெந்த கோப்புகளை சோதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு Search என்னும் பொத்தானை அழுத்தவும்.
சிறிது நேரம் நீங்கள் குறிப்பிட்ட கோப்புகள் சோதிக்கப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்படும். அதில் உங்கள் விருப்பபடி போலி கோப்புகளை நீக்கி கொள்ள முடியும்.

Post a Comment

Previous Post Next Post