விண்டோஸ் 7 இயங்குதளத்தை ISO கோப்பாக தரவிறக்கம் செய்வதற்கு

மைக்ரோசாப்டின் இயங்குதளங்களின் வரிசையில் எக்ஸ்பிக்கு அடுத்தப்படியாக கணணி பயன்பாட்டாளர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்த இயங்குதளம் என்றால் அது விண்டோஸ் ஏழு மட்டுமே ஆகும்.
இந்த இயங்குதளம் பல்வேறு விதமான சிறப்பு வசதிகளை பெற்று இருந்தது. இந்த விண்டோஸ் 7 பதிப்பானது 2009ம் வருடம் அக்டோபர் 22 திகதி சந்தைக்கு வந்தது.
இதில் இருந்த குறைபாடுகளை நீக்கி விண்டோஸ் 7னுடைய மீள்பதிப்பு பிப்ரவரி 2011ல் வெளியானது. இந்த மீள்பதிப்பை தற்போது ISO கோப்பாகவும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று குறிப்பிட்ட இயங்குதளத்தை தரவிறக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த ISO கோப்பை எதாவது ஒரு பர்னிங் டூல் கொண்டு பூட்டபிள் கோப்பாக மாற்றிக் கொள்ளவும்.
பின் நீங்கள் வழக்கம் போல் இயங்குதளத்தை நிறுவிக்கொள்ளவும். இவ்வாறு நீங்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் இயங்குதளங்கள் 30 நாட்கள் இயங்க கூடியதாக மட்டுமே இருக்கும். இதனை முழுமையாக இயங்க செய்ய ஆக்டிவேட் செய்ய வேண்டும்.
லைசன்ஸ் கீயை தரவிறக்கம் செய்து முழுமையாக இயங்குதளத்தை நிறுவிக் கொள்ளவும். இதன் மூலம் நீங்கள் விண்டோஸ் 7 இயங்குதளத்தையே இலவசமாக பெறுவீர்கள். இதில் முக்கியமான விடயம் இணைய இணைப்பு வேகமாக இருந்தால் மட்டுமே உங்களால் இயங்குதளத்தை தரவிறக்கம் செய்ய முடியும்.

Post a Comment

Previous Post Next Post