உலகில் உள்ள அனைத்து தாவரங்களின் விபரங்களையும் படங்களுடன் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


சில வகை தாவரங்களின் பெயர் மட்டும் நமக்கு தெரியும் ஆனால் இந்த தாவரங்கள் எப்படி இருக்கும் என்று கூட நமக்கு தெரியாது , இப்படி நமக்கு தெரியாத பல தாவரங்களின் தகவல்கள் மற்றும் படங்கள் அதன் குண நலன்கள் எனஅனைத்தையும் பட்டியலிட்டு காட்ட ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
இயற்கை நமக்கு கொடுத்த ஒரு அரிய பொக்கிஷம் தான் தாவரங்கள் என்று கூறினால் அது மிகையாகாது அந்த அளவிற்கு பல அரிய மூலிகைகள் இன்றும் மனிதரின் பல நோய்களை குணப்படுத்தி வருகிறது. இப்படி நமக்கு தெரியாத தாவரங்களை படத்துடன் விபரமாக தகவல்களை கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.theplantlist.org
இத்தளத்திற்கு சென்று நாம் வலது பக்கம் இருக்கும் Search என்ற கட்டத்திற்குள் எந்த தாவரத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமோ அதன் பெயரை கொடுத்து Search என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நாம் தேடிய தாவரத்தை பற்றிய முழுவிபரமும் நமக்கு கிடைக்கும், இந்த தாவரத்திற்கு வேறு என்ன பெயர்கள் எல்லாம் இருக்கிறது , எந்த நாட்டில் இந்த தாவரம்  அதிகமாக காணப்படுகிறது, இதன் அறிவியல் பெயர்கள் மற்றும் இந்த தாவரத்தினால் நமக்கு ஏற்படும் நன்மை என்ன என்பது முதல் அனைத்து தகவல்களையும் கொடுக்கிறது. பல இலட்சம் தாவரங்களின் தகவல்கள் இத்தளத்தில் உள்ளது, இனி நாம் எந்த தாவரத்தையும் விரிவாகவும் தெளிவாகவும் தெரிந்து கொள்ளலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு இயற்கை ஆர்வலர்களுக்கும் இயற்கை மருத்துவருக்கும் பயனுள்ள பதிவாக இருக்கும்.

Post a Comment

Previous Post Next Post