கணினியில் கோப்பு வகைகளை கையாள இலவச மென்பொருள் FileTypesManகணினியில் கோப்பு வகைகளை கையாள இலவச மென்பொருள் FileTypesManகணினியில் கோப்பு வகைகளை கையாள இலவச மென்பொருள் FileTypesMan


கணினியில் நாம் பல வகையான கோப்புகளைப் பயன்படுத்துவோம். exe, mp4, mp3, doc, xls etc என்று ஒவ்வொரு மென்பொருள்களுக்கும் அந்த மென்பொருளை குறிப்பிடும் வகையில்மூன்று எழுத்துகளில் கோப்பு வகையின் பெயர் இருக்கும். இதை Extension name என்று சொல்வார்கள். இதை வைத்து தான் கணினி இந்த வகை கோப்பை இந்த மென்பொருளின் மூலம் திறக்கப் பட வேண்டும் என எடுத்துக் கொள்கிறது. இவை பெரும்பாலும் ஒரு மென்பொருளை நிறுவும் போதே கோப்பு வகைக்கான பெயரை File Types இல் சேர்த்துவிடும். இதனைப் பார்க்க நாம் My Computer சென்று மெனுவில் Folder Options -> View File Types பகுதிக்கு செல்ல வேண்டும். 

சில நேரங்களில் தவறுதலாக மென்பொருள்களை நீக்குவது அல்லது எதாவது வைரஸ் தாக்குதலின் போது கோப்பு வகைகள் மாறிவிடும் நிகழ்வும் இருக்கிறது. மேலும் குறிப்பிட்ட பயன்பாட்டுக்கு ஒன்றுக்கு மேல் மென்பொருள்கள் நிறுவும் போது எந்த மென்பொருளில் திறக்கப்பட வேண்டும் என்பது மாறிவிடும். அந்த மாதிரி நேரங்களில் File Types சென்று எதில் திறக்க வேண்டும் என்பதை Open with மூலம் மாற்றுவோம். இந்த வேலைக்கென இருக்கும் மென்பொருள் தான் FileTypesMan ஆகும்.


இந்த மென்பொருள் விண்டோசில் இயல்பாக இருக்கும் Folder Options மூலம் அறியக்கூடிய விசயங்களை விட அதிகமான விவரங்களை அறிந்து கொள்ள உதவுகிறது. இந்த மென்பொருள் கணினியில் உள்ள எல்லா வகையான கோப்புகளின் Extension களைப் பட்டியலிடுகிறது. மேலும் குறிப்பிட்ட கோப்பு வகையின் பெயர், விவரங்கள், அது என்ன வகையான பயன்பாடு, Mime Type, Flags போன்றவற்றையும் தெரிவிக்கிறது.

இதன் மூலம் குறிப்பிட்ட கோப்பு வகையின் பண்புகளை எளிதாக மாற்ற இயலும். கோப்பு வகைகளுக்கான open, print போன்ற Action களை சேர்க்கவும் மாற்றவும் அழிக்கவும் முடியும். பயன்படுத்த எளிமையான இந்த மென்பொருளை நிறுவத் தேவையில்லை. அப்படியே கிளிக் செய்து பயன்படுத்தலாம். இது விண்டோசின் அனைத்து பதிப்புகளிலும் செயல்படக் கூடியது.

தரவிறக்கச்சுட்டி: Download FileTypesMan

Post a Comment

Previous Post Next Post