ஆங்கிலம் துணுக்குகள் 15

ஆங்கில அரிச்சுவடி (English Alphabet)

"English Alphabet" 26 எழுத்துக்களை கொண்டுள்ளது. இதனை தமிழில்"ஆங்கில அரிச்சுவடி" அல்லது "ஆங்கில நெடுங்கணக்கு" என்றும் அழைப்பர்.

a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

இந்த 26 ஆங்கில எழுத்துக்களில் உயிர் எழுத்துக்கள் (vowels) ஐந்தும், மெய் எழுத்துக்கள் (consonants) இருபத்தி ஒன்றும் உள்ளன.

உயிரெழுத்துக்கள்: a e i o u 
மெய்யெழுத்துக்கள்: b c d f g h j k l m n p q r s t v w x y z 

ஆங்கில எழுத்துக்கள் 26 என்றாலும் அவை "கெப்பிட்டல்" (பெரிய) எழுத்துக்களாகவும் "சிம்பல்" (சிறிய) எழுத்துக்களாகவும் இரண்டு விதமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

ஆங்கில பெரிய எழுத்துக்கள் (English Capital Letters)
ஆங்கில சிறிய எழுத்துக்கள் (English Simple Letters)

A a
B b
C c
D d
E e
F f
G g
H h
I i
J j
K k
L l
M m
N n
O o
P p
Q q
R r
S s
T t
U u
V v
X x
Y y
Z z

ஆங்கில நெடுங்கணக்கில் 26 எழுத்துக்கள் மட்டுமே உள்ளன எனக் கூறப்பட்டாலும், அவற்றில் பெரிய எழுத்துக்கள், சிறிய எழுத்துக்கள் என இரண்டு வரி வடிவங்கள் உள்ளன. எந்தெந்த இடத்தில் எந்தெந்த எழுத்துக்களை பயன்படுத்த வேண்டும் என்பதை மனதில் இருத்தி பயன்படுத்துதல் அவசியம். அதாவது, ஒரு வாக்கியத்தில் எந்த இடத்தில் பெரிய எழுத்து பயன்படும்? எந்தெந்த சொற்களில் பெரியெழுத்து முதலெழுத்தாக பயன்படும்? எந்தெந்த சுருக்கச்சொற்கள் பெரிய எழுத்தில் எழுதவேண்டும், சிறிய எழுத்தில் எழுதவேண்டும், பெரிய எழுத்தும் சிறிய எழுத்தும் கலந்து எழுதவேண்டும்? எனும் இலக்கண விதிமுறைகள் உள்ளன.

அவற்றை இப்பாடத்தில் பார்க்கவும்.

அதுமட்டுமல்ல, ஆங்கில அரிச்சுவடியில் உள்ள 26 எழுத்துக்களை மட்டுமே கொண்டு ஆங்கிலத்தில் உள்ள அனைத்து ஒலிப்புகளையும் ஒலிக்கவும் முடியாது. அதனை இங்கேபார்க்கவும்.

சரி! ஆங்கில அரிச்சுவடியில் உள்ள 26 எழுத்துக்களையும் ஒரே வாக்கியத்தில் உள்ளடக்க முடியுமா? அவ்வாறு 26 எழுத்துக்களும் உள்ளடங்கிய ஆங்கில வாக்கியம் உள்ளதா? அவ்வாறான வாக்கியத்தை ஆங்கிலத்தில் எப்படி அழைக்கப்படுகின்றது?

ஒரு மொழியின் அரிச்சுவடியில் உள்ள அனைத்து எழுத்துக்களும் உள்ளடங்களாக அமையப்பட்டிருக்கும் வாக்கியத்தை "Pangram" என அழைக்கப்படுகின்றது. (A pangram is a sentence that contains every letter of the alphabet.) ஆங்கில மொழியிலும் ஒரு "Pangram" வாக்கியத்தை ஒக்ஸ்போர்ட் அகராதியில் கொடுத்துள்ளார்கள். இதோ அவ்வாக்கியம்:

"The quick brown fox jumps over the lazy dog."
இணையத்தில் இதற்கான ஆதாரம்: http://www.oxforddictionaries.com/page/138

தொடர்புள்ள இடுகைகள்:

ஆங்கில மொழியின் 44 ஒலியன்கள்

இது ஒரு துணுக்குப் பாடமாகும்.

Download As PDF

Post a Comment

Previous Post Next Post