நம் வலைப்பூவை படித்துக்கொண்டு இருப்பவர்களை அவர்கள் நாட்டு கொடியுடன் காட்டலாம்.


நம் வலைப்பூவை பார்த்துக்கொண்டிருக்கும் நபர்களை அந்தந்த நாட்டு
கொடியுடன் எத்தனை பேர் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்
என்பதை எளிதாக காட்டலாம் எப்படி என்பதைப்பற்றித் தான்
இந்தப்பதிவு.
படம் 1
நம் வலைப்பூவை தற்போது எந்தெந்த நாட்டில் எத்தனை பேர் பார்த்து
கொண்டு இருக்கின்றனர் என்ற தகவலை அந்த நாட்டு கொடியுடன்
காட்டுவது எப்படி என்பது பற்றி கனடாவில் இருந்து நண்பர் மிதுன்
என்பவர் கேட்டு இருந்தார் அவருக்காக மட்டுமின்றி நம் நண்பர்கள்
அனைவருக்காகவும் நம் வலைப்பூவை எத்தனை வாசகர்கள் பார்த்து
கொண்டு இருக்கின்றனர் என்பதை கொடியுடன் காட்டலாம். நமக்கு
உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
படம் 2
இணையதள முகவரி : http://www.flagcounter.com
இந்ததளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி எத்தனை நாட்டு
கொடிகள் காண்பிக்க வேண்டுமோ அதற்கு Maximum Flags to Show
என்பதில் எண்ணிக்கையில் கொடுக்கவும் உதாரனமாக நாம்
12 நாட்டு கொடிகளை காட்டவும் என்று கொடுத்துள்ளோம் அடுத்து
எத்தனை காலம் வேண்டும் என்பதற்கு Columns of Flags என்பதில்
கொடுக்கவும் உதாரணமாக நாம் 2 காலமாக பிரித்து
கொடுத்துள்ளோம். Flag Map -ல் வேண்டுமென்றால் Flag Map என்பதை
தேர்ந்தெடுத்துக்கொளவும் அடுத்து எந்த வண்ணம் வேண்டுமோ
அதையும் தேர்ந்தெடுத்துக் கொண்டு Get Your Flag Counter என்ற
பொத்தானை சொடுக்கவும்.
படம் 3
அடுத்து வரும் திரை படம்  3-ல் காட்டப்படுள்ளது இதில் இருப்பது
போல் காட்டப்பட்டு இருக்கும் கோடிங் -ஐ காப்பி செய்து நம் தளத்தில்
கொடுக்கவும் இனி எத்தனை பேர் எந்தெந்த நாட்டில் இருந்து
கொண்டு உங்கள் தளத்தை பார்த்து கொண்டு இருக்கின்றனர்
என்ற தகவல் தெரியவரும். கண்டிப்பாக வலைப்பதிவர்களுக்கு
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Post a Comment

Previous Post Next Post